(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”ஏன்டா இப்படி பேசற பாரு அவள் சோகமாயிட்டா” என கேட்க

   

”ஆகட்டுமே என்ன இப்ப தாமரை என்னை வைச்சி அவள் எவ்ளோ செஞ்சிருக்கா அவளால எல்லாம் இழந்துட்டேன். தெரியுமா பெரிசா வீடு கட்டிட்டா குறுக்க சுவர் எழுப்பி ரெண்டா பிரச்சிடலாம்னுதான் யாருக்கும் பிரச்சனை இல்லை பாரு”

   

“2 வீடா கட்டப் போறியா வேணாம்டா ஒத்துமையா ஒரே வீட்ல இருக்கலாம்”

   

”அது சரியா வராது தாமரை ரெண்டாவே இருக்கட்டும்”

   

“இல்லை இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் கட்டினா ஒரே வீடா கட்டு இல்லையா கட்டாத” என தாமரை கத்தவும் அவனும் அதோடு சரியென தலையாட்டியவன்

   

”சரி கீர்த்தனா இப்ப பெரிசாவே ஒரே வீடா கட்டிடலாம், சுத்திலும் கார்டன் வேணாம் முன் பக்கம் மட்டும் போதும், ஒரே வாசப்படி போதும், கிழக்கு பார்த்து வைச்சிடலாம். அதுக்கு ஏத்த மாதிரி ப்ளான் வரைஞ்சிடு” என சொல்ல அவளும் சரியென்றாள்

   

”அதுக்கு தேவையான பொருளுக்கு நான் என்ன செய்றது”

   

“உன் அண்ணன் கொண்டாந்து தருவான்” என சொல்லிவிட்டு தாஸை பார்க்க அவனும் சரியென தலையாட்டவே 

   

”சரி வா போலாம்” என தாஸை கூப்பிட அவன் உடனே எழுந்து நின்றான். அடுத்து சரண்யாவை தேட அவள் இல்லாமல் போகவே

   

”சரண்யா சரண்யா” என அழைக்கவே தாமரை

   

”எதுக்குடா அவளை கூப்பிடற”

   

“கோயிலுக்கு கூட்டிட்டு போறேன்” என சொல்ல இம்முறை கீர்த்தனாவின் முகம் வாடி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.