(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”அப்பா போன் பண்ணாரு, அந்த ஹாஸ்டல் கட்டற வேலையை பத்தி கேட்டாரு, நீ என்ன முடிவு செஞ்சிருக்க”

   

“எதுவும் இல்லை நான் ப்ளான் போட்டு கொடுத்துட்டேன் அதோட என் வேலை முடிஞ்சது”

   

“ப்ளான் போட்டா யார் கட்டறது”

   

“அது அதான் அக்ரிமெண்ட் கேன்சல் ஆயிடுச்சே” என சொல்ல சிரித்தான் தேவா

   

”சரி கோயிலுக்கு போயிட்டு நேரா காலேஜ்க்கு போய் அந்த ஓனர்கிட்ட பேசலாம், அவர் என்ன நினைச்சிருக்கார்ன்னு தெரியலை யாருமே ஹாஸ்டல் கட்டலைன்னா நம்ம வீட்டுக்குதான் கெட்ட பழி வரும்? ஒரு வேலையை ஒத்துக்கிட்டு செய்யாம இருக்கறது தப்பு புரியுதா” என சொல்ல அவளும் தலையாட்ட 

   

”பூ வைக்கலையா நீ, கீர்த்தனா வைச்சிருந்தாளே”

   

“அவள் கொடுத்தா நான்தான் வைச்சிக்கலை”

   

“ஏன் உனக்கு பூ பிடிக்காதா”

   

“இல்லை எதுக்குன்னு”

   

“புரியலை”

   

“எங்க போகப் போறோம்னு வைச்சிக்கலை” என சொல்ல தேவா தாஸிடம்

   

”தாஸ் 1 முழம் பூ வாங்கி வா” என சொல்ல தாஸோ தேவாவை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு வண்டியை பூக்கடைப்பக்கம் விட்டு இறங்கி பூவாங்க சென்றான். அவன் சென்றதும் சுற்றி முற்றிப் பாரத்தவன் அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.