கொண்டு கோயிலுக்கு வெளியே செல்ல சரண்யா அழ ஆரம்பிக்கவே தாஸோ அவளை சமாதானம் செய்தான் அவளோ எதுவும் சாப்பிடாமல் இருக்கவே
”சாப்பிடு” என சைகை செய்ய அவள் கஷ்டப்பட்டு ஒரு வாய் எடுத்துக்கொண்டு மீதியை தாஸிடம் தந்துவிட்டு தேவாவை காணச் சென்றாள். அவனோ இப்போது ட்ரைவர் சீட்டில் அமர்ந்துக் கொண்டிருக்க பின் சீட்டில் ஏறி அமர்ந்துக் கொண்டு
”சாரி” என்றாள்
”வாயை மூடு பேசாத” என கத்தவும் தாஸ் வரவும் சரியாக இருந்தது. அந்த இலை அப்படியே இருக்கவே
”என்னாச்சி சாப்பிடலையாமா” என கேட்க அவன் ஆம் என சொல்ல
”நீ சாப்பிடு வா உட்காரு வா” என சொல்ல தாஸ் ஏறிக் கொண்டதும் கார் வீட்டை நோக்கி சென்றது. தாஸோ என்ன இந்த பக்கம் என சைகை செய்ய அவன் பதில் சொல்லாமல் கோபமாக இருப்பதைக் கண்டு சரண்யாவை பார்க்க அவள் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டு என்ன செய்வது என புரியாமல் கையில் இருந்து பிரசாதத்தை அமைதியாக சாப்பிடலானான்.
வீடு வரவும் தேவா ஹாரன் அடித்து
”கீர்த்தனா கீர்த்தனா” என அழைக்க சில நொடிகளில் உள்ளிருந்து வெளியே வந்தாள் கீர்த்தனா
”சொல்லுங்க” என மூச்சிரைக்க வந்து நிற்க
”ஏன் இப்படி ஓடிவர்ற பொறுமையாதான் வாயேன் இந்தா கோயில் பிரசாதம் நான் பாதி சாப்பிட்டேன் நீ சாப்பிட்டுக்க, ஆனா இது என் எச்சில் பரவாயில்லையா” என கேட்டுக் கொண்டே நீட்ட அவளோ சிரித்தபடியே அதை வாங்கிக் கொண்டு