தேடிப்பிடித்தவன் அவரிடம் ஹாஸ்டல் பற்றிக் கேட்க
”நானும் அதைதான் யோசிக்கறேன், இப்ப முடிவு நீதான் எடுக்கனும் எப்படி என்ன செய்யலாம்ங்கற”
“என்ன செய்றதுன்னு தெரியலை ஆமா ட்ரான்ஸ்போர்ட்டுக்கான அக்ரிமெண்ட் போட்டீங்களா”
“ஏண்டா நீதானே போட்டுக் கொண்டு வரேன்னு சொன்ன”
“அதுவா ஒரே வேலை எங்கயும் போக முடியலை” என சொல்ல அவரோ சிரித்தபடியே
”புரியுது புரியுது சரி சரி நானே அக்ரிமெண்ட் ரெடி பண்றேன், இப்ப அந்த காலேஜ் ஓனர்கிட்டதான் போய் பேசனும்”
“நீங்க ஒண்ணு பண்ணுங்க சரண்யாவை கூட்டிட்டு நீங்க காலேஜ் போங்க, நான் போய் ட்ரான்ஸ்போர்ட் அக்ரிமெண்ட் ரெடி பண்ணிட்டு வரேன்” என சொல்ல அவரும் அதற்கு சம்மதம் சொல்ல சரண்யாவோ தேவாவையே ஏக்கமாகப் பார்த்தாள்
”என்ன பார்வை இது, நான் என்ன காசிக்கா போறேன், நீ அப்பாட்டதானே இருக்க ஒழுங்கா இருக்கற வழியை பாரு, சீக்கிரமா ஹாஸ்டல் கட்டி முடி” என சொல்லிவிட்டு அவன் தாஸுடன் வெளியே சென்றுவிட கைலாசமோ
”சரண்யா அவன் அப்படித்தான், வம்பு பண்றான் நீ கவலைப்படாத வாம்மா வா அந்த காலேஜ் ஓனர் சிதம்பரத்தை பார்த்து பேசிட்டு வருவோம் வா” என சொல்ல அவளும் சரியென அவருடன் வீட்டை விட்டு வெளியே வர கூடவே தேவாவின் சித்தப்பாவும் சேதுப்பிள்ளையும் சேர்ந்துக் கொள்ளவே நால்வருமாக காலேஜ் நோக்கிச் சென்றார்கள்.
லாயரைக் கண்டு அக்ரிமெண்ட் ரெடி செய்தவன் தன் தந்தைக்கு போன் செய்தான் தேவா
”ஹலோ அப்பா அக்ரிமெண்ட் ரெடி அங்க என்னாச்சி”