(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“ஒரே சுத்து நான் அங்க வந்து அவளை கூட்டிட்டு போகனுமா, டைம் வேஸ்ட் ஆகும் அவளை ஆட்டோல அனுப்புங்க” என சொல்லி போனை வைத்துவிட்டான் தேவா. அந்நேரமே மதியமாகவும் கீர்த்தனா சாப்பிடாமல் இருப்பதை நினைத்து உடனே தாஸ் உடன் வீடு திரும்பினான்.

   

அங்கு சரண்யாவை அழைத்து வந்த கைலாசமோ தாமரையிடம் பேசிக் கொண்டிருக்க

   

”என்னப்பா இங்க இருக்கீங்க”

   

”அக்ரிமெண்ட் எங்க?” என கேட்க அவனும் நீட்ட அதை படித்து பார்த்து விட்டு கையெழுத்து போட்டு அவனிடம் தந்தவர் கூடவே சாவிகளையும் தந்தார்

   

”இந்தா சாவி உன் ட்ரான்ஸ்போர்ட் அப்புறம் ஒர்க்ஷாப்போடது. நாளைக்கு நல்ல நாள்தான் திறந்து வேலையை ஆரம்பி. அங்கயும் வேலைகள் ஆரம்பிக்கனும், 5 மாசத்துக்கு ஒழுங்கா வந்து வேலையை பாரு”

   

“சரி”

   

“தினமும் சரண்யாவை கூட்டிட்டு வந்துடு அவளை பத்திரமா வைச்சிக்க, தொலைச்சிடாத”

   

“சரி”

   

“கீர்த்தனாவோட வீட்டு ப்ளான் பார்த்தேன் நல்லாயிருக்கு ஆனா, அங்க அங்க நிறைய குறைகள் இருக்கு அதை பார்த்து சரிபண்ணிடு கண்ணை மூடிட்டு சரிங்காத”

   

“சரி”

   

”சரி நான் கிளம்பறேன்” என எழுந்து தாமரையிடம் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட

   

”கீர்த்தனா” என அழைக்க அவள் வந்தாள் அவளிடம் பத்திரம் சாவிகளை தந்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.