தேவா.
மாலையில் சரண்யா கண் விழிக்க தேவாவோ அமைதியாக உறங்கி கொண்டிருப்பதைக் கண்டு அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகையை கண்டு உறக்கம் கலைந்து கண்கள் திறந்தவன்
”எதுக்கு அழற” என கேட்க அவள் பதில் சொல்லாமல் அழவே
”ஏய் நான்தான் எதுவும் செய்யலையே அப்புறம் ஏன் அழற”
“நீங்க எதுவும் செய்யலைன்னுதான் நான் அழறேன், நான் உங்க ஒய்ப் தானே, இவ்ளோ தூரம் வந்துட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என கேட்க அவனோ சிரித்தபடியே
”அது என்னவோ சரியாதான் சொல்ற, இவ்ளோ தூரம் வந்தேன் ஆனா உன்னை பார்க்கறப்ப நீ செஞ்ச பிரச்சனைங்க சண்டைங்கதான் என் கண்ணு முன்னாடி வந்து நிக்குது அதான் எதுவும் பண்ணாம தூங்கிட்டேன் சரி எழு எழு டைம் ஆகுது பாரு எழுந்து ரெடியாகு கோயிலுக்குப் போலாம்”
“காலையிலதானே போனோம் திரும்ப எதுக்கு இப்ப போகனும்” என அவள் கேட்கவே அவனுக்கு கோபமே வந்தது
”நீ இப்படி இருக்கறதாலதான் எனக்கு உன்னை பிடிக்காமயே போகுது. நான் தினமும் காலையிலயும் சாயங்காலமும் கோயிலுக்குப் போவேன் அந்த நினைப்பில உன்னை கூப்பிட்டேன்.”
“சாரி எனக்கு தெரியாது நான் இதோ ரெடியாகிடறேன்”
“தேவையில்லை நீ இங்கயே இரு”
“இல்லை நான் வரேன்ங்க” என அவள் கெஞ்ச