“எங்க போறீங்க ரெண்டு பேரும்”
“என் சொந்தங்களுக்கு இவளை காட்டப் போறேன்”
“ஓ இதோ இவளையும் கூட்டிட்டு போ” என சரண்யாவை காட்ட
”இவள்னா என் கூட நடந்து வருவா, அவளுக்கு கார் வேணும்னா நான் எங்க போறது”
“அதான் வெளிய கார் நிக்குதே அதுல போங்க நான் எங்கயும் போகலை வீட்லதான் இருப்பேன், நாளைக்குதான் வேலை இருக்கு”
என சொல்ல பாட்டியோ
”இல்லை நான் கீர்த்தனாவை மட்டும்தான் அழைச்சிட்டு போவேன்” என தாமரை அடமாக பேச சரண்யா அமைதியாகி
”நீங்க போங்க நான் வரலை எனக்கு டயர்டா இருக்கு” என சொல்ல அதோடு தாமரையும் கீர்த்தனாவும் வெளியே செல்ல கிளம்ப தாஸ்
”நான் என்ன செய்றது” என சைகையில் கேட்க
”அவங்க கூட நீயும் போய் வா தேவைப்பட்டா கார் எடுத்துக்க, நான் போய் தூங்கறேன் நீ கிளம்பு” என சொல்ல தாஸும் தாமரை மற்றும் கீர்த்தனாவை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதும் கதவை சாத்திவிட்டு சரண்யாவை தேடி வந்தான்.
”இப்ப எதுக்கு தாமரை வெளிய போகனும் ஏதோ தப்பா இருக்கு” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே வந்தவன் சரண்யா படுத்திருப்பதைக் கண்டு அவள் பக்கம் படுத்துக் கொள்ள சட்டென கண்கள் திறந்து
”இங்க என்ன செய்றீங்க” என கேட்டவளை இழுத்து அணைத்து தூங்க ஆரம்பித்தான்