”பத்திரமா பீரோவில வைச்சிடு, சாவியை வெளிய மாட்டி வை நாளைக்கு வேலையை ஆரம்பிக்கலாம்” என சொல்ல அவளோ
”சாப்பிட வாங்க பரிமாறிடறேன்”
“சரண்யா எங்க?”
“உள்ள ரூம்ல”
“சரி பரிமாறு இதோ வரேன்” என சொல்ல தாஸ் தாமரையிடம் அமர்ந்துவிட தேவா சரண்யாவை தேடிச் சென்றான். அவள் முகம் சோகமாக இருக்கவே
”எப்ப பாரு சோகமாவே இருக்கியே சிரிப்பே வராதா உனக்கு” என கேட்க
”இல்லை நீங்க என்னை கூட்டிட்டு போகலைன்னு மாமா சொன்னாரு”
“எனக்கு வேலையிருக்கு நான் ஒண்ணும் உன் ட்ரைவர் கிடையாது. நீ எங்க போனாலும் உன் பின்னாடியே சுத்தறதுக்கு, நாளையிலிருந்து 5 மாசத்துக்கு உன்னை பார்த்துக்கறேன் அப்புறம் நீயே தனியாதான் உன்னைப் பார்த்துக்கனும் புரியுதா”
“புரியுது”
“சரி வா சாப்பிடலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் சாப்பிட அமர்ந்து அனைவருடனும் சாப்பிட்டு முடித்தான்.
சாப்பிட்டு முடித்த உடன் தாமரை
”தேவா நான் கீர்த்தனாவை கூட்டிட்டுப் போறேன்”