“நிறைய தொகையாச்சே”
“பரவாயில்லை எனக்கு இப்ப வேலையானா போதும், உன்னோடது லட்சங்கள்தான் இங்க ஹாஸ்டல் கட்டினா கோடிக்கணக்கான பணம் வரும் அதோட பார்க்கறப்ப உன்னோடது எனக்கு பெரிசில்லை”
“வர வர இப்படி ஆளே மாறிட்டீங்களேப்பா”
“என்னடா செய்றது உனக்கு பரவாயில்லை சட்டுன்னு 2 பொண்ணுங்களை கட்டிக்கிட்ட, உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்ல”
“அதான் வீட்லயே பொண்ணு இருக்காளே”
“இருக்கா இருந்தாலும் இப்ப சம்பாதிச்சாதான் உண்டு, அவன் கையில பொறுப்பு கொடுத்த பின்னாடி நான் ரிட்டயராகி வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன்”
“அப்ப இந்த ஹாஸ்டல் வேலையோட முடிச்சிக்குங்க”
“அதையேதான் நானும் நினைச்சேன். நீயும் சீக்கிரமா குழந்தையை பெத்துக் கொடு அதையாவது நான் வளர்க்கறேன்”
“ஏன்பா நானே வளர்த்துக்கறேனே”
“எதுக்கு உன்னை போல குழந்தையை தயார் செய்றதுக்காகவா முடியாது” என சொல்ல அவன் சிரித்துவிட்டு
”சரிப்பா சரி நான் வீட்டுக்குப் போறேன் நீங்க சரண்யாவை ஆட்டோல ஏத்தி அனுப்பிடுங்க”
“டேய் நீ வந்து கூட்டிட்டு போடா”