”எனக்கு இதுவே அமிர்தம் போலதான் நான் சாப்பிட்டுக்குவேன்” என சொல்ல அவன் சிரித்தான்.
”சரி நான் அப்பாட்ட போறேன் வர நேரமாகும் சாப்பிடாம இருக்காத சாப்பிட்டு தூங்கு”
“பரவாயில்லை நான் காத்திருக்கேன்”
”நேரமாகும்டி”
“பரவாயில்லை அதான் இப்பவே சாப்பிட பிரசாதம் கொடுத்தீங்களே”
“இது கொஞ்சமாதான் இருக்கு நான் வர்றவரைக்கும் எப்படி உனக்கு பத்தும்”
“எல்லாம் எனக்கு பத்தும் நீங்க போயிட்டு வாங்க” என சொல்ல அவனோ சிரித்தபடியே டாட்டா காட்டிவிட்டு வண்டியை தனது தந்தை வீட்டிற்குச் செலுத்தினான்.
பின்னாடி கண்ணாடி வழியாக சரண்யாவை பார்க்க அவளோ கண்கள் கலங்கி இருப்பதைக்கண்டு
”எதுக்கு அழற” என தேவா கேட்க தாஸ் அவனை சந்தேகமாக பார்க்க தேவாவோ
”காதுல விழலை ஏண்டி அழற” என கத்த சரண்யா உடனே கண்களை துடைத்துக் கொண்டு
”அது கீர்த்தனா பேசினது கேட்டேன். எனக்கு இதெல்லாம் தெரியாது”
என விசும்ப
”முதல்ல அழறது நிறுத்து எப்ப பாரு அழுதுக்கிட்டு, இப்படியே என் முன்னாடியிருந்தா எனக்கு பிடிக்காது. நீ தைரியமான பொண்ணுதானே இப்ப என்ன எல்லாத்துக்கும் அழற