வழக்கம் போல சாமி தரிசனம் முடித்த உடன் தியானம் செய்ய அமர்ந்துவிட இம்முறை சரண்யாவும் அவனைப் பார்த்து தானும் செய்வதாக தாஸிடம் சொல்ல அவன் மறுக்க அவள் கேளாமல் கண்கள் மூடி தியானம் செய்யலானாள்.
108 முறை அவள் சொல்லி முடித்து கண்கள் திறக்க தன்னைச் சுற்றி யாரும் இல்லாமல் போகவே பயந்தே விட்டாள்
”சொன்னது போலவே என்னை தேவா விட்டுட்டாரே” என அழ ஆரம்பிப்பதற்குள்
”ஏய் சரண்யா வா வா” என அழைக்க, சத்தம் கேட்டு எழுந்து பார்க்க ஓரிடத்தில் தாஸும் தேவாவும் அமர்ந்துக் கொண்டு பிரசாத பொங்கலை சாப்பிட்டுக் கொண்டிருக்க அவ்விடம் சென்றாள்.
”நான் பயந்துட்டேன்”
“ஏன்?”
“என்னை தனியா விட்டு போயிட்டீங்களோன்னு”
“போகத்தான் நினைச்சேன் அந்நேரம் பிரசாதம் கொடுத்தாங்களா அப்படியே உட்கார்ந்துட்டேன் இந்தா சாப்பிடு” என அவன் இலையை நீட்ட தாஸ் தடுத்தான். அவன் தனியாக சரண்யாவுக்கு என்று வாங்கி வைத்த இலையை அவளிடம் தர தேவா அவளை முறைத்தான்
”ஏன் புருஷன் எச்சிலை சாப்பிட்டா உனக்கு கசக்குதாம்மா” என சொல்ல அவளோ பதறினாள்
”இல்லை அப்படியில்லை கொடுங்க சாப்பிடறேன்”
”சீ போ” என அவளை தள்ளிவிட்டு தான் வைத்திருந்த பிரசாத இலையை மூடி எடுத்துக்