(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

நடிக்கறியா இல்லை இது நிஜமா”

   

“தைரியமாதான் இருந்தேன் எனக்கு எல்லாரும் இருந்தாங்கன்னு நினைச்சப்ப, இப்ப நீங்க மட்டும்தான் என் உலகம் ஆனதும் எங்க நீங்க என்னை விட்டு போயிடுவீங்களோன்னு பயத்தில அழுகை அதுவா வருது”

   

“வரும் வரும் நல்லதுதான் அழுதா கண்கள் சுத்தமாகும், நான் இல்லாதப்ப அழுதுக்க இப்ப அழாத” என சொல்ல அவளும் சரியென தலையாட்டினாள்.

   

தேவாவின் வீட்டில் வண்டி நின்றதும் மூவரும் இறங்கி வீட்டுக்குள் செல்ல முதலில் தேவாவை பிடித்தார் வைத்தி தாத்தா

   

”தேவா தாமரை எப்படியிருக்கா?” என கேட்க

   

”ஆனாலும் தாத்தா உனக்கு குசும்புதான் போ என்னை பத்தி விசாரிப்பேன்னு பார்த்தா உன் காதலியை பத்தி விசாரிக்கிறியே”

   

“உனக்கென்னடா குறைச்சல் ஒருத்திக்கு ரெண்டு பேர் பாவம் தாமரை தனியா இருக்காளே”

   

“வேணும்னா அவளோட புருஷன்கூட சேர்த்து வைச்சிடவா“

   

“வேணாம்”

   

“அப்ப அமைதியா இரு சரி அப்பா எங்க”

   

“உள்ளதான் இருக்கான் போ போ” என சொல்ல பின்னாடி வந்த சரண்யாவோ தாத்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவே

   

”தீர்க்க சுமங்கலி பவ” என ஆசி வழங்கவும் தேவா சிரித்தான்

   

”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என சொல்லிக் கொண்டே தன் தந்தையை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.