“இங்கயும் எந்த பிரச்சனையும் இல்லை இதுக்கும் புதுசா அக்ரிமெண்ட் போடனும்”
“பழைய அக்ரிமெண்ட் மாடல் படி போட சொல்லவா”
“அது வேணாம் இந்த முறை புதுசா போடு”
“புதுசா ஏன் என்ன விசயம்?”
“இதப்பாரு சொல்றதை செய் கேள்வி கேட்காத இந்த முறை அக்ரிமெண்ட்ல நீ ஹாஸ்டல் கட்டறதா போடு”
“எது நானா என்ன விளையாடறீங்களா என்கிட்ட பணமே இல்லை ஆளை விடுங்க, இந்த பில்டிங் கட்டறதெல்லாம் என்னால முடியாது நானே கீர்த்தனாவை வைச்சி எனக்குன்னு ஒரு வீட்டை கட்டலாம்னு ப்ளான் கூட போட்டு ரெடியா வைச்சிருக்கேன் நீங்க என்னடான்னா”
“அப்படியா சரி சரி அப்ப நாங்களே கட்டிக்கறோம் ஆனா, வேலைக்கு ஆளுங்களுக்கு என்ன செயறது”
“என்ன செய்றதுன்னா உங்க கிட்ட ஆளுங்க இல்லையா”
“இருக்காங்க மத்த பில்டிங் கட்டறாங்கடா உன் ஆளுங்கதான் தேவை”
“அப்ப நான் எப்ப வீடு கட்டறது”
“முதல்ல இதை முடிப்போம் அப்புறம் நீ வீடு கட்டுவ”
அப்பா பெரிய ஹாஸ்டல் கட்டி முடிக்கவே 2 வருஷம் ஆகும், அதுவரைக்கும் நான் வாடகை வீட்ல இருக்கனுமா முடியாது”