(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“வேணாம்மா நீ பேசு நல்லாவே பேசு இல்லைன்னா, நான் உன்னை சித்ரவதை பண்றதா ஊர் உலகம் தப்பா பேசும், இப்ப வீட்டுக்குள்ள போ நான் கோயிலுக்கு போயிட்டு வரேன் கேள்வி கேட்காம வீட்டுக்குள்ள போயிடு” என சொல்லும் போதே கார் வரவே கீர்த்தனா இறங்கி ஆசையாக வந்து நின்றாள்

   

”நானும் கோயிலுக்கு வரேன்” என சொல்ல அவன் சிரித்தான்

   

”வா வா உனக்காகதான் காத்திருந்தேன் ஆமா எங்க போயிருந்தீங்க”

   

“பாட்டியோட தெரிஞ்சவங்க தோழிங்க வீட்டுக்கு”

   

“ஓ தாமரை உனக்கு  தோழிங்க இருக்காங்களா சொல்லவே இல்லை நானும் வந்திருப்பேன்ல”

   

“அதுக்கென்ன அடுத்த முறை கூட்டிட்டு போறேன், நீங்க கிளம்புங்க சீக்கிரமா கோயிலை சுத்திட்டு வாங்க” என சொல்ல தேவாவும் சரியென கீர்த்தனாவை பார்க்க அவளோ சரண்யாவையே பார்த்தாள்

   

”அங்க என்ன பார்வை வா போலாம்”

   

“இல்லை இந்த புடவை நல்லாயிருக்குல்ல நான் கட்டற மாதிரியே இருக்கு பாருங்களேன்” என காட்ட அவன் அப்போதுதான் அவளையே பார்த்தான் கேரள பாணியில் அன்று தேவா எடுத்த புடவையை இன்று சரண்யா கட்டிக் கொண்டிருக்க அதிர்ந்தான்.

   

கீர்த்தனாவோ சரண்யாவிடம்

   

”புடவை நல்லாயிருக்கு இது போல கேரளா காட்டனை நான்தான் கட்டுவேன், நீங்க எப்ப இதை வாங்கினீங்க”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.