(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“அப்புறம் அவள் மேல ஏன் கோபப்படற கூட்டிட்டு போ”

   

“என்னால 2 பொண்ணுங்களையும் கூட்டிட்டு போக முடியாது, அதான் காலையில அவளை கூட்டிட்டு போனேனே இப்ப நான் இவளை கூட்டிட்டு போறேன்” என சொல்ல அவரோ

   

”ஓ நீ அப்படி வர்றியா சரி அப்ப ஒரு வேளை இவள் கூட கோயிலுக்கு போ, ஒரு வேளை அவள் கூட கோயிலுக்கு போ”

   

“ஷ் தாமரை வேணாம் இந்த சரண்யாவுக்காக நீ பரிஞ்சிப் பேசாத சரியா, என்னிக்காவது அவள் சுயரூபம் காட்டுவா அன்னிக்கு நீயே அவளை புரிஞ்சிக்குவ பாரு” என சொல்லிக் கொண்டே கீர்த்தானா மற்றும் தாஸ் உடன் காரில் ஏறி முதலில் கோயிலுக்கு சென்றுவிட்டு அடுத்து சினிமா தியேட்டருக்கு செல்ல தாஸிடம் தேவா

   

”3 டிக்கெட் எடு”

   

”யாருக்கு” என அவன் சைகையில் கேட்க

   

”நம்ம 3 பேருக்குதான்”

   

“அப்ப சரண்யா” என அவன் கேட்க தேவாவோ

   

”டேய் வேணாம்டா வேணாம் அவள் வேணாம் நாம போலாம் வா” என சொல்ல அவன் ஒப்புக் கொள்ளவில்ல மறுப்பாக பேச தேவாவோ

   

”நீ போ நானே டிக்கெட் வாங்கிட்டு வரேன்” என சொல்ல தாஸ் அதற்கும் ஒப்புக்  கொள்ளாமல் சரண்யாவை அழைத்து வருகிறேன் என சொல்லிவிட்டு செல்ல தேவா தடுத்தும் முடியாமல் போனான்.

   

”இவன் ஒருத்தன், நீ வா கீர்த்தனா அவன் வர்றதுக்குள்ள டிக்கெட் வித்து போயிருக்கும் வந்த வழியாவே போய் சேரட்டும் நீ வா” என 2 டிக்கெட் எடுத்துக் கொண்டு காத்திருந்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.