”அழாதே அதான் உனக்கு எதுவும் ஆகலையே விடு அழாத” என சொல்ல அவள் கைகள் நடுங்குவதையும் முகம் பயத்தில் வெளுத்துப் போனதையும் கண்டவன்
”தாஸ் வண்டியை எடு இதுக்கு மேல படத்தை பார்க்க முடியாது வா வீட்டுக்குப் போலாம் வா” என சொல்ல தாஸ் உடனே சரியென்றான். கீர்த்தனா சரண்யாவை பிடித்து அழைத்துவர அதைப்பார்த்து எரிச்சலானவன் கீர்த்தனாவை தன் பக்கம் இழுக்க தாஸ் தடுக்க எப்படியோ நால்வருமாக வீடு வந்து சேர்ந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் கீர்த்தனா நடந்ததைக் கூற தாமரையோ தேவாவிற்கு
”என்னடா நீ இப்படியா செய்வ”
“நான் என்ன செஞ்சேன் சும்மா என்னையே குறை சொல்லாத தாமரை இவளை யாரு எழுந்து வெளிய போக சொன்னது” என சரண்யாவை கேட்க
“அதுக்காக அவள் முன்னாடியே நீயும் கீர்த்தனாவும் கொஞ்சிக் கிட்டிருந்தா அவள் எப்படி இருப்பாளாம்
”தெரிஞ்சித்தானே என்னை கட்டிக்கிட்டா, வீட்லயும் நான் கீர்த்தனாவோடதானே இருக்கேன், பார்க்கறாள்ல தியேட்டர்ல மட்டும் என்னவாம், அப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதானே அப்படி கஷ்டமாயிருந்தா இப்பவே டைவர்ஸ் பண்ணிட்டு போகச் சொல்லு இல்லை தாலியை கழட்டிட்டு அவள் தாத்தா கிட்ட போயிட சொல்லு” என தேவா சொல்ல சரண்யா உடனே அதிர்ச்சியுடன் தேவாவை பார்த்தாள்
”ஆக உங்களுக்கு தேவை டைவர்ஸ்தானா”
“புரிஞ்சிக்கிட்டா சரி” என சொல்ல அதைக் கேட்டு சரண்யா அழவும் தாமரையோ
”போதும் தேவா நிறைய பேசிட்ட, நீ எதுக்கு இப்ப அவளை விரட்டப்பார்க்கற”