“ஷ் அமைதி அமைதி இப்ப என் பொண்டாட்டி நீதான், நான் ஆசைப்பட்டு காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இப்படி நீ என்கிட்ட நடந்துக்காத வா கோயிலுக்கு போய் வரலாம் வா வாம்மா என்னை நம்பு வா, அப்படியே சினிமாவுக்கு போயிட்டு பொறுமையா வரலாம் வா” என சொல்ல
”சரண்யா”
“அவள் எதுக்கு நானும் அவளுக்கு வாய்ப்பு கொடுத்தேன் நல்லவளா காட்டிக்க அவளால முடியலை, என்ன செய்றது அவளுக்காக நாம ஏன் வாழாம, இப்படி கஷ்டப்படனும், நான் ஒண்ணு சொல்லவா அவள் இருக்கறதையே நீ மறந்துடு நீ வா நாம போலாம் வா” என சொல்லி அவளை அழைத்து வெளியே வர ரெடியாக தாமரை சரண்யாவை அவன் பக்கம் நிற்க வைத்தார்
”என்ன செய்ற தாமரை”
“அவளையும் கூட்டிட்டு கோயிலுக்கு போ”
“முடியாது”
“தேவா நான் சொன்னதை செய் அவள் ஒண்ணும் உங்க ரெண்டு பேரையும் பிரிக்க நினைக்கலை. அவளை பிடிக்காம நீயா அவள் மேல பழி போடாத”
“என்ன பழி போட்டேன் அவள்தான் போடறா”
“என்ன போட்டா பாவம் அவளுக்கு தெரியாது இந்த புடவையை நீ கீர்த்தனாவுக்கு வாங்கித் தந்ததுன்னு நீ சொன்னியா அவள்ட்ட”
“இல்லை”