(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

ஒருகட்டத்தில் அவளால் முடியாமல் எழுந்து வெளியே செல்ல தேவா அதைப்பார்த்து சிரித்தான்

   

”பாவம் அவள் போயிட்டா”

   

“போகட்டும் விடு அவளை விரட்டத்தான் இப்படி செஞ்சேன். இனிமேல நமக்குள்ள அவள் என்னிக்குமே வரக்கூடாது முடிஞ்சா டைவர்ஸ் பண்ணிட்டு போகட்டும்” என சொல்ல கீர்த்தனாவோ

   

”அவளும் பொண்ணுதானே இருங்க, நான் போய் கூட்டிட்டு வரேன்”

   

“வேணாம் அமைதியா இரு அவளுக்காக நீ பரிதாபப்படாத”

   

“போதும் இருங்க வரேன் பாவம் அவள் அழுதுக்கிட்டு இருப்பா” என சொல்லும் போதே இன்டர்வெல் பெல் அடிக்கவே அனைவரும் எழுந்துக் கொள்ள தாஸ் வந்தான் சரண்யா இல்லாமல் போகவே தேவாவை உலுக்க அவனோ தள்ளி விட்டான்

   

”போடா போ அவளாதான் வெளிய போனா எனக்குத் தெரியாது” என சொல்ல அவனோ தலையில் அடித்துக் கொண்டு வெளியே ஓட கீர்த்தனாவும் எழுந்து வெளியே செல்ல தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்தான் தேவா அமைதியாக.

   

அங்கு சரண்யாவிடம் 2 பேர் வம்பிழுப்பதைக் கண்ட தாஸ் அவர்களிடம் சென்று சைகை செய்ய அவர்கள் தாஸை தள்ளிவிடவே கீர்த்தனா வந்தாள். அவளையும் அந்த இருவர் பிடிக்க தேவா வந்து அந்த இருவரையும் விரட்டிவிட்டான். அதில் கீர்த்தனாவிற்கு எந்த பயமும் இல்லை அவள் தாஸிடம் சென்று நின்றுவிட சரண்யா மட்டும் பயத்துடன் தேவாவை அணைத்துக் கொண்டு அழவே 

   

”ஏய் விடு என்னை விடு” என தள்ளி விடவே அவள் பதட்டத்தில் தரையில் அமர்ந்து அழவும் தேவா தலையில் அடித்துக் கொண்டு அவளை எழுப்பி நிற்க வைத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.