“நான் வாங்கலை அவர்தான் வாங்கினாரு” என தேவாவை கைகாட்ட அதிர்ந்தான் தேவா
”அடிப்பாவி” என மனதுக்குள் அவளை திட்டியபடியே கீர்த்தனாவை பார்க்க அவளோ சந்தேகமாக பார்க்க
”அப்படி பார்க்காத அவள் என்னிக்குதான் முழு உண்மையை சொல்லியிருக்கா, கல்யாணத்துக்கு முன்னாடி உனக்காக நான் ஒரு புடவை வாங்கினேன்னு சொன்னேன்ல அது இந்த புடவைதான் நான் இவள்ட்ட கொடுக்கலை தவறி போய் பாட்டி கொடுத்திருக்காங்க”
“ஓ அதான் அன்னிக்கு புடவை எங்கன்னு கேட்டா காபி கொட்டிச்சின்னு பொய் சொன்னீங்களா”
“இல்லை கீர்த்தி நிஜமாவே காபி கொட்டிச்சி வேணா இவளை கேட்டுப்பாரு” என சரண்யாவை காட்ட அவளோ
”காபி கொட்டலை நான் சும்மா சொன்னேன்” என சொல்ல தேவா தலையில் கையை வைத்து கீர்த்தனாவை பார்க்க அவளோ உடனே தலை குனிந்து வீட்டுக்குள் சென்றுவிடவே தேவா சரண்யாவை முறைத்தான்
”அவளை ஏன் முறைக்கற” என தாமரை கேட்க
”பாரு தாமரை என்ன செஞ்சி வைச்சிருக்காள்ன்னு, இவளால அவள் கோச்சிக்கிட்டு போறா சே” என அவன் நொந்துக் கொள்ள சரண்யாவோ
”சாரி எனக்குத் தெரியாது இந்த புடவையை நீங்க அவளுக்காக வாங்கினீங்கன்னு”
“ஆனா நீ இருக்க பாரு, நல்லாவே வேலை செய்றம்மா, நல்லா விளையாடற, இப்ப புரியுது உன் நோக்கம் என்னன்னு, என்னையும் கீர்த்தானாவையம் பிரிச்சி அவள் இடத்துல நீ மட்டும் இருக்கனும்னு ஆசைப்படற, ஒரு நாளும் அது நடக்காது நடக்கவும் விடமாட்டேன்,