முதல் ஷோ பார்த்த மக்கள் வெளியே வந்ததும் அடுத்து ஷோக்காக அனைவரும் செல்ல தேவா கீர்த்தனாவுடன் உள்ளே சென்றான். தேடிப்பிடித்து கார்னர் சீட்டில் இருவரும் அமர்ந்து தங்களுக்குள் கொஞ்சிக் கொண்டே பேசி சிரிக்க அந்நேரம் தாஸ் அங்கு வந்தான். அந்த மங்கிய வெளிச்சத்திலும் தேவாவை சரியாக கண்டுபிடித்தவன் அவன் முன் நின்று முறைத்தான்
”வந்துட்டியா என்னடா உன் பிரச்சனை என்னை ஜாலியா சினிமா பார்க்க விடமாட்டியா” என கத்த அவனோ உடனே வெளியே சென்று சரண்யாவை அழைத்துக் கொண்டு தேவாவின் பக்கத்தில் அமர வைத்துவிட்டு தேவாவிடம்
”இப்ப ஜாலியா இரு” என சைகையில் சொல்லிவிட்டு அவன் முன்புறமாக சென்று தனியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்துக் கொண்டதும் இரு பெண்களையும் மாறி மாறி தேவா பார்க்க அவர்களும் ஒருவருக்கொருவர் பார்க்க அந்நேரம் படம் போடவே இதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை என நினைத்து படம் பார்க்கலானான் தேவா.
மூவரும் அமைதியாக படத்தை பார்ப்பதைக் கண்டு முன்சீட்டில் அமர்ந்தபடியே பார்த்த தாஸை பார்த்து முறைத்து அவன் முதுகில் ஒரு அடி போட உடனே எழுந்து வேறு பக்கமாக சென்று அமர்ந்துக் கொண்டதும் திருப்தியாக படம் பார்த்தான் தேவா. அழகான ரொமான்ஸ் படம், பாடல்களும் அற்புதமாக இருக்கவே அதில் லயித்துப் போன தேவாவோ கீர்த்தனாவை பார்த்தான், அவள் படத்தையே பார்க்க திரும்பி சரண்யாவை பார்க்க அவள் அவனையே பார்க்க அதிர்ந்தான்
”என் முகத்திலயா படம் ஓடுது அங்க பாரு”
“இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்துட்டேன் உங்க கிட்ட நான் சாரி சொல்லிக்கிறேன் சத்தியமா நான் எந்த சூழ்ச்சியும் செய்யலை”
“தியேட்டராச்சேன்னு பார்க்கறேன் இல்லைன்னு வையேன் உன்னை திட்டிடுவேன் என்னை பார்க்காம அங்க பாரு படத்தை பாரு” என கத்திவிட்டு திரும்ப கீர்த்தனாவோ குழப்பமாக