(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

நீ திருந்திட்டேன்னு நினைச்சது தப்பு நீ மாறவேயில்லை, சூழ்ச்சி செஞ்சி என்னை கல்யாணம் பண்ண, இப்ப அதே சூழ்ச்சி செஞ்சி கீர்த்தனாவை ஒழிச்சி கட்ட பார்க்கறியா, என்னிக்குமே அப்படி நடக்காது” என அவளிடம் கத்திவிட்டு கீர்த்தனாவை தேடி அவன் வீட்டுக்குள் செல்ல சரண்யாவோ நின்ற இடத்திலேயே தெருவில் அமர்ந்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்

   

”நான் அப்படி எதுவும் சூழ்ச்சி செய்யலை” என அவள் சொல்ல சொல்ல தாமரைக்கும் தாஸ்க்கும் கஷ்டமாகிப் போனது

   

”சரண்யா உள்ள வா இப்படி தெருவில அழாத வாம்மா வா” என அவளை எழுப்பிக்கொண்டு அழைத்துச் சென்று வீட்டில் விட்டதோடு அவளை சமாதானம் செய்யலானார்.

   

அங்கு தேவாவோ கீர்த்தனாவிடம்

   

”சரண்யா சூழ்ச்சி செஞ்சி நம்மளை பிரிக்க பார்க்கறா வேணும்னே எல்லாம் செய்றா, நீ அவள் பேச்சை நம்பி என்னை சந்தேகப்படறியா”

   

“மதியம் நாங்க இல்லாதப்ப நீங்க சரண்யாகூடதானே இருந்தீங்க”

   

“இருந்தேன் ஆனா தள்ளியிருந்தேன் புரியுதா ஏன் இப்படி சந்தேகப்படற?”

   

“சந்தேகம் இல்லை நீங்க செய்றதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு”

   

“என்னடி பயம் உனக்கு எப்படி பார்த்தாலும் நீதான் என் முதல் பொண்டாட்டி அப்புறம் ஏன் பயப்படற”

   

“அப்படியில்லை அந்த சரண்யா”

   

“அவளை கண்டு நீ பயப்படாத, அவள் என்ன செஞ்சாலும் சரி அவள் நினைப்பு பலிக்காது”

   

“ஆனா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.