(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”பேசாத எப்ப பாரு நான் ஒண்ணு சொன்னா உடனே ஆயிரம் கேள்வி கேட்கறது, எதுக்கு கேட்கற நான் உன் புருஷன்தானே உனக்கு என் மேல நம்பிக்கையில்லையா இப்படி கேள்வி கேட்டு எல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பின்னாடிதான் மகாராணியோட கால் தெருவுக்கு வருமோ, உன் கூட பழக நினைச்சி உனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அதை நீயேதான் கெடுத்துக்கற, எக்கேடு கெட்டுப் போ” என அவளை திட்டிவிட்டு தன் அறைக்கு வந்தவன் அவசரமாக முகம் கழுவி கோயிலுக்கு செல்ல ரெடியாகி வெளியே வர தெருவில் ரெடியாக நின்றுக் கொண்டிருந்தாள் சரண்யா, அவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் சிரித்தவன் வெளியில் கோபத்துடன் அவளிடம் வந்தான்

   

”இங்க என்ன செய்ற?”

   

“சாரி சாரி இனிமே நான் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன்”

   

”அது உன்னால முடியாது, நீ கேள்வி கேட்டே பழக்கப்பட்டவ உன்னால அடுத்தவங்களோட எண்ணங்களை புரிஞ்சிக்க முடியாது”

   

“இல்லை இதுக்கப்புறம் நான் புரிஞ்சிக்கிறேன் ப்ளீஸ் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க”

   

“கிழிச்ச”

   

”இல்லை இல்லை ப்ளீஸ் ப்ளீஸ்”

   

“ம்ஹூம் இன்னிக்கு விடு நாளையிலிருந்து 5 மாசத்துக்கு ஹாஸ்டல் கட்டறதுக்காக 2 பேரும் ஒண்ணா வேலைக்கு போய் ஒண்ணா வேலை செய்யப் போறோம், என்னை நம்பாம எவ்ளோ கேள்விகள் நீ கேட்பியோ இப்பவே எனக்கு உன்கூட வேலை செய்யனும்னா கஷ்டமாயிருக்கு, அப்பாவாலதான் இப்படி ஒவ்வொரு முறையும் நான் உன்கிட்ட மாட்டிக்கிறேன்”

   

”சாரி ப்ளீஸ் இனிமேல நான் அதிகமா கேள்வி கேட்கல, தேவைப்படறப்ப பேசறேன் இனிமே பேச கூட மாட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.