“இவள் இருந்தா என்னால குடும்பம் நடத்த முடியாது”
“அப்படின்னு யார் சொன்னது ரெண்டு பேருமே உன் பொண்டாட்டிங்கதான்”
“என்னால ஒருத்தி கூடதான் வாழ முடியும் அதுவும் கீர்த்தனாவோடதான் வாழ்வேன்” என முடிவாக சொல்லிவிட்டு கீர்த்தனாவை எழுப்பி இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொள்ள அதைப்பார்த்த சரண்யா அழுது கொண்டேயிருக்கவே தாஸ்க்கு கஷ்டமாகிப் போனது அவள் அழுகையும் தேவாவின் செயலும் வெறுப்பை தர உடனே வீட்டை விட்டு வெளியேறினான்.
தாமரையோ சரண்யாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லியும் அவளோ
”நான் தேவாவை விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா இப்படி நடக்கும்னு நான் நினைக்கலை, எனக்கும் அவர் மேல ஆசையிருந்திச்சி. ஆனா அவர் என்னை இப்படி வெறுப்பார்ன்னு தெரிஞ்சிருந்தா நான் கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டேன்”
“கல்யாணம் பண்ணாம அப்புறம் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணியிருப்பியா”
“இல்லை இப்படியே தனியா இருந்திருப்பேன்”
“சரண்யா கவனமா கேளு தேவா உன்கிட்ட விளையாடறான், அவன் உன்னை வெறுப்பேத்தி உன்னை அழவைச்சி ரசிக்கறான்.”
“ஏன்?“
”நீயும் நிறைய தப்பு பண்ணிட்டல்ல அதான்”
“இந்த தண்டனை ரொம்ப கொடுமையா இருக்கு பாட்டி” என அவரின் மடியில் படுத்து அழவே