(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ட்ரான்ஸ்போர்ட் கைக்கு வந்திருக்கு, இனி அதை நல்லா பார்த்துக்கனும் இந்த முறை நான் யாரையும் நம்ப போறதில்லை உனக்கு அக்கவுண்டஸ் தெரியுமா”

   

“ம்ஹூம்”

   

“எனக்கு தெரியும்” என்றாள் சரண்யா

   

”நீ வேணாம்”

   

“ஏன்?”

   

“நீ ஹாஸ்டலை கட்டு அதுபோதும், இனி நானே கணக்கு வழக்கு பார்க்கறேன் கீர்த்தனா நீ வீட்ல பத்திரமா இரு, எங்கயும் போக வேணாம் நான் மதியம் வந்துடுவேன்” என சொல்ல சரண்யா உடனே சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு வந்து நின்றவளிடம் தேவா

   

”ப்ளான் எங்க”  என கேட்க அவள் உடனே தன் லக்கேஜில் இருந்து பைல் ஃப்ளான் என அனைத்தும் எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்ட

   

”நீயே வைச்சிக்க வா வா போலாம்” என சொல்ல அவளும் அவனுடன் காரில் ஏறிச் சென்றாள்.

   

முதல் நாள் ஹாஸ்டல் கட்டும் இடத்தில் தன் வேலையாட்களிடம் சரண்யாவை புது இன்ஜினியர் என்றும் அவள் சொல்வதை செய்யுமாறும் 5 மாதம்தான் வேலை என்றும் சொல்லவே அவர்களும் அதற்குச் சரியென்றார்கள். 

   

அதன்படி சரண்யா ஒவ்வொன்றாக சொல்லி அதற்கேற்ப ஆளுங்களை பிரிக்க தேவா அவளது நிர்வாகத்திறமையைக் கண்டு வியந்தான். 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.