(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அவளும் ஆர்வமாகி சாப்பிட்டு உடனே வேலையில் இறங்கினாள். அவளது வேகம் அங்கிருந்த ஆட்களுக்கு கஷ்டமாகிப் போனது

   

”சரண்யா அவங்களை ரொம்ப வேலை வாங்காத, பொறுமையா செய்ய விடு, இல்லைன்னா அவங்களால வேலை செய்ய முடியாம லீவு எடுப்பாங்க” என சொல்ல அவளும் அதற்கு ஒப்புக் கொண்டாள்

   

அதற்காகவே 

   

”எனக்கு யார் எப்படி வேலை செய்வாங்கன்னு தெரியலையே நீங்கதான் பார்த்துக்கனும்”

   

“நீ என்ன செய்யனும்னு சொல்லிட்டல்ல விடு, நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன் அது சரியா இருக்கான்னு மட்டும் பாரு அப்புறம் எவ்ளோ கல்லு ஜல்லி மணல்னு ரிப்போர்ட் கேட்டேனே அதை ரெடி செஞ்சியா நீ”

   

“இன்னும் இல்லை“

   

“போ முதல்ல அதை ரெடி பண்ணு, அதை கொடுத்தாதான் ஓனர் பணம் தருவாரு அதை வைச்சித்தான் எல்லாம் வாங்கி கொண்டாந்து கட்டனும் புரியுதா சீக்கிரம் செய் தப்பில்லாம செய், தப்பு பண்ண நமக்குதான் நஷ்டம் தோராயமா போடறதாயிருந்தா அதிகமா போடு பின்னாடி மிச்சமானாலும் வித்துடலாம் குறைவா போட்டு கடைசியில ஓனர் கிட்ட நின்னா அவரு நம்பாம போயிட்டா நமக்கு கஷ்டம்”

   

“எனக்கு புரியுது நான் அப்படியே செய்றேன்” என சொல்லி அவள் சென்று ரிப்போர்ட் தயாரிக்க தேவா, தாஸ் இருவரும் இருள் கவியும் வரை வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

   

சரண்யா களைத்துப் போய் இருந்தாள், அவளைக் கண்டதும் கீர்த்தனா

   

”என்னாச்சி?” என கேட்க

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.