(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

என்ன செய்ய வேண்டும்? ஏது செய்ய வேண்டும் என அனைத்தும் ப்ளான் காட்டி அவர்களுக்கு விளக்கினாள்.

   

அவர்களுக்கு பாதி புரிந்தும் புரியாமலும் போனது

   

”இதெல்லாம் எங்களுக்கு புரியாதும்மா என்ன செய்யனும்னு சொல்லிடுங்க அப்படியே செய்றோம்” என சொல்ல அவளும் ஒவ்வொரு வேலையாக சொல்ல ஆரம்பிக்க அதன்படி வேலைகளும் தொடங்கியது.

   

இதில் தேவா, தாஸ் இருவரும் சூப்பர்வைசர்களாக மாறினார்கள். மதியம் ஆனதும் சரண்யாவை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த தேவா சரண்யாவிற்கு தாஸிடம் கேரியர் கொடுத்து அனுப்பிவிட அதை தாஸ் சரண்யாவிடம் தர

   

”ஏன் இப்படி  செய்றாரு என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே” என சொல்ல அவனோ

   

”நிறைய வேலை இருக்கு இங்க யாராவது ஒருத்தர் இருந்தே ஆகனும்” என அவன் சைகையில் சொல்லவே அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். தேவா உடனே அங்கு வந்துவிட்டான். அதைக்கண்டதும்

   

”இவ்ளோ சீக்கிரம் நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கலை”

   

“உன்னை இங்க அம்போன்னு விட்டுட்டு வீட்ல நான் என்னத்த செய்ய”

   

“இல்லை கீர்த்தனாவோட இருப்பீங்கன்னு”

   

“அது நைட்லதான் பொழுதுக்குமா இருப்பாங்க சரி சரி சாப்பிட்டியா”

   

“இல்லை”

   

“சரி போய் சாப்பிட்டு வா, மட மடன்னு வேலையை முடிக்கலாம் வா” என சொல்ல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.