(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“சரி சரி நீங்க கிளம்புங்க” என கைலாசம் சொல்ல தேவா கீர்த்தனாவிடம் 

   

”அடிக்கடி தாமரையையும் பார்த்துக்க சரியா, என்மேல கோபமா இருக்கும் கொஞ்சம் பேசி சமாதானம் செய்” என அவளிடம் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு சரண்யாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

   

கீர்த்தனாவும் இந்த பாட்டி வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு மதியத்திற்கு மேல் அனைவரும் உறங்கியபின்பு தாமரை வீட்டிற்கு சென்றாள். அங்கு அனைவரும் கவலையாக இருக்கவே பயந்தாள். சுந்தரத்திடம் சென்றாள்

   

”தாத்தா என்னாச்சி ஏன் சோகமா இருக்கீங்க”

   

என கேட்க அவரோ பூஜையறையை காட்ட அங்கு பாட்டி தியானத்தில் இருந்தார். விளக்கு அணையாமல் இருக்க கீதா மித்ராவை அங்கு அமர்த்தி வைத்திருந்தார், விளக்கில் எண்ணெய் தீர தீர எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள் மித்ரா.

   

”என்னாச்சி தாத்தா” என கேட்க

   

”நேத்து காலையில வீட்டுக்கு வந்தா, வந்த உடனே தியானத்தில உட்கார்ந்துட்டா இன்னும் எழலை, எதுவும் சாப்பிடலை கூப்பிட்டாலும் பதிலே பேசலை” என அவர் சோகமாகச் சொல்ல கீர்த்தனாவிற்கு பக்கென்றது

   

 அவள் தாமரையிடம் சென்று

   

”பாட்டி பாட்டி” என மெதுவாக கூப்பிட்டு அவரது தோளை உலுக்கியும் பலனில்லை. அவர் தியானத்தில் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கவே அவளுக்கு பக்கென்றது. உடனே தேவாவுக்கு போன் செய்ய அவனும் அரக்க பரக்க வந்து சேர்ந்தான்.

   

”என்னாச்சி தாமரைக்கு என்னய்யா செஞ்ச அவளை, உன்னை நம்பி விட்டுப் போனா இப்படியா செய்வ நல்லா வாழுன்னுதானே சொன்னேன், இப்படி அவளை உட்கார 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.