வைச்சிருக்க” என சுந்தரத்திடம் கத்த
”நான் எதுவும் செய்யலை. அவளா வந்தா தியானம் செய்ய ஆரம்பிச்சா என்ன செய்றதுன்னு எனக்கும் தெரியலை” என பாவமாக சொல்ல கீதா அங்கு வந்தார்
”ஆமாம் தேவா மாமா மேல தப்பில்லை, இன்னும் சொல்லனும்னா அத்தை சாப்பிடலைன்னு மாமாவும் சாப்பிடலை தெரியுமா”
என சொல்ல தேவா உடனே தாமரையிடம் சென்றான்
”தாமரை தாமரை வா தாமரை” என கத்தியபடியே அவளை உலுக்கியும் கண் திறவாமல் போகவே தண்ணீர் தெளிக்க எண்ணி தண்ணீரை எடுக்க
”பாட்டி தியானத்தில இருக்காங்க அது முடியட்டும் இப்படி செஞ்சா தப்பாயிடும்” என கீர்த்தனா தடுக்கவே
”அப்படின்னா சரி நீ பாட்டி பக்கத்திலயே இரு ஏதாவதுன்னா உடனே குரல் கொடு, நான் வந்துடறேன் நீ இங்கயே இரு சரியா நான் நைட் வரேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட கீர்த்தனா பாட்டியின் பக்கம் அமர்ந்துவிட்டாள். கீதா நேரத்திற்கு அனைவருக்கும் சாப்பாடு கொடுத்தாலும் தாத்தா பாட்டி மட்டும் சாப்பிடவில்லை. கீர்த்தனா கூட சாப்பிட்டு விட்டு அடிக்கடி தன் கணவனிடம் நடப்பதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
நைட் ஆனதும் தேவா சரண்யாவுடன் சுந்தரம் வீட்டிற்கு வந்தான்
”இன்னும் தியானத்தில் இருந்த தாமரையைக் கண்டதும் குழம்பினான்
”ஏன் இப்படி உட்கார்ந்திருக்கா என்னாச்சி, நான் சொன்னதாலயா இல்லையே 2 நாளா இப்படியே இருக்காளே, சுகர் இருக்கு, பிபி இருக்கு இப்ப இந்த தியானம் ரொம்ப முக்கியம் என்ன செய்றது இப்ப” என மனதில் யோசித்தவனுக்கு சட்டென தன் தாத்தாவின் நினைப்பு வரவே உடனே வீட்டிற்குச் சென்றான்