(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

தாமரையின் இறப்பு அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியாகவே மாறியது.

   

நேரம் கடத்தாமல் அன்று மாலையே இறுதி சடங்கு செய்தார்கள். சுடுகாடு வரை அழுதுக் கொண்டே சென்ற வைத்தியநாதனோ அதற்கு மேல் அவராலும் நடக்க முடியாமல் சுருண்டு விழவே அனைவரும் பயந்தார்கள். என்ன ஏது என பார்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார் என தகவல் வரவே சுந்தரம் அதிர்ந்தான். தேவாவோ என்ன செய்வது என தெரியாமல் அவனது குடும்ப வழக்கப்படி தாத்தாவை புதைத்து விட்டு சுந்தரத்தின் குடும்ப வழக்கபடி சுந்தரமே தாமரையை எரியூட்டிவிட்டு அனைவரும் வீடு திரும்பினார்கள்.

   

ஒரே நாளில் இரு மரணங்கள் நடந்த காரணத்தால் தேவா முற்றிலும் உடைந்துப் போனான்.

   

தாமரை மற்றும் வைத்தியின் மறைவால் ஹாஸ்டல் கட்டும் வேலை கூட 1 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

   

தேவா சரண்யா கீர்த்தனாவுடன் வாடகை வீட்டிலேயே தங்கிவிட்டான். மூவரும் வீட்டில் இருந்து வேளை தவறாமல் சாப்பிட்டாலும் ஏனோ யாரும் யாரிடமும் முகம் பார்த்து சிரித்து பேசாமல் அமைதியாக இருந்தார்கள். தாஸ் வைத்தி தாத்தாவின் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யலானான்.

   

3வது நாளே காரியமும் வைத்துவிட்டார்கள். சுந்தரமோ தாமரையின் இறப்பு வைத்தியின் இறப்பு ரெண்டிலும் தன் தவறு அதிகம் என உணர்ந்தவர் வீட்டை விட்டு வெளியேறாமல் சொத்தையும் மூன்றாக பிரித்து தன் மகன்களுக்கு கொடுத்துவிட்டு தன் அறையில் முடங்கி விட்டார்.

   

1 வாரம் கழித்து 

   

தேவா ஒருவழியாக தன்னை திடப்படுத்திக் கொண்டு ஹாஸ்டல் வேலைகளில் மூழ்கினான். அவனிடம் இருந்த சந்தோஷம் முற்றிலும் மாயமானது. சோகமாகவே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.