(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

6 மாதம் முடிந்த நிலையில் கைலாசநாதன் ஹாஸ்டல் கட்டும் வேலையை கையில் எடுத்துக் கொண்டார். இம்முறை சரண்யாவிற்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துவிட்டான் தேவா, அதில் அவள் ஹாஸ்டல் கட்டும் இடத்திற்குச் சென்றுவிட தேவா கீர்த்தனாவுடன் தனக்கான சொந்த இடத்தில் கீர்த்தனாவை வைத்துக் கொண்டு ஒரு வீடு கட்டலானான். 

   

அந்த வீட்டிற்கு தாமரை என பெயர் கூட சூட்ட ஆசைப்பட்டான். இன்று பூமி பூஜை வீட்டிற்கு நேராகவே அந்த காலி இடம் இருந்த காரணத்தால் தாஸும் தேவாவும் அந்த வேலைகளை செய்து விட்டு காலையிலேயே குடும்பமாக அதாவது தாஸ் தேவா சரண்யா கீர்த்தனா நால்வர் மட்டுமே பூஜையை முடித்தார்கள். இனி வீடு கட்ட வேண்டும்

   

”இன்னிக்குத்தான் பூஜை போட்டோம் உடனே கட்ட ஆரம்பிக்க வேணாமா லோடு எல்லாம்  வந்து இறங்கிடுச்சி. ஆட்களும் ரெடியா இருக்காங்க சீக்கிரம் கீர்த்தனா”

   

“ஆச்சிங்க இந்தாங்க ப்ளான்” என சொல்ல அவனும் அதை வாங்கிக் கொண்டான் அதற்குள் சரண்யா டிபனுடன் வந்தாள்

   

இம்முறை சரண்யா வீட்டு வேலைகள் அனைத்தும் செய்யலானாள் முதல் 6 மாதம் கீர்த்தனா செய்தாள். இனி வரும் 6 மாதம் சரண்யா செய்வாள் என அவர்களே பிரித்துக் கொண்டார்கள். தாமரையின் இறப்பால் கீர்த்தனாவும் சரண்யாவும் ஒண்றானது தேவாவிற்கு சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் அவர்களிடம் ஒட்டாமல் இருந்தான், 

   

புது வீடு முடிந்து சென்ற பின்புதான் வாழ்க்கை தொடங்கலாம் என சொல்லிவிட அவர்களும் அதற்குச் சரியென்றார்கள், கீர்த்தனாவிற்கு என்னவென்றால் எப்படியோ தேவா பழையபடி மாறிவிட்டான் அது போதும் என நினைத்தாள், சரண்யாவோ எப்படியோ தன்னை தேவா மனைவியாக ஏற்றுக் கொண்டான் இது போதும் அவன் என் நிழலை கூட தொடலைன்னா பரவாயில்லை என நினைத்து தான் தேவாவின் மனைவி என்கிற கடமையை ஆற்றலானாள். 

   

ஆனாலும் கீர்த்தனா மற்றும் சரண்யா மனதுக்குள் தேவா மீதான ஒரு வித உரிமை இருக்கவே செய்தது அதன் காரணமாக அதை வெளியே காட்டிக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.