இருந்தான். கூடவே தன் மீதே கோபத்தில் இருந்தான், தான் பேசியதால் தானே தாமரை இப்படியானாள் என நினைத்து சரண்யாவையும் கீர்த்தனாவையும் ஒரு வார்த்தை கூட தவறாகவோ கோபமாகவோ பேசாமல் பார்த்துக் கொண்டான்.
தேவாவின் மனநிலையைக் கண்டு அவனை எதற்காகவும் வற்புறுத்தாமல் அவன் மனது மாறி தானாக வரட்டும் என நினைத்து அமைதி காத்தாள் கீர்த்தனா. தாத்தாவின் மரணத்திற்கு பிறகு அந்த வீட்டிற்கு போவதையே மறந்தான் தேவா. கீர்த்தனாவும் சரண்யாவும் அந்த வீட்டில் எது நடந்தாலும் கலந்துக் கொண்டார்கள். அதை தேவா மறுக்கவில்லை அவன் மட்டும் ஏனோ வரவில்லை.
நாட்கள் வாரங்கள் ஆனது வாரங்கள் மாதங்கள் ஆனது. 6 மாதங்கள் கழித்து
நாட்கள் வேகமாக ஓடியதாலும் ஹாஸ்டல் கட்டும் வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் தினம் தினம் நடந்த நிகழ்வுகளாலும் தேவா சிறிது சிறிதாக மாறி 6 மாதங்கள் ஆனதும் பழையபடி மாறினான். ஆனாலும் அவன் வீட்டிற்குச் செல்லாமல் இருந்தான்.
”சரண்யா” என கத்த அவளோ
”வரேன்ங்க”
“எவ்ளோ நேரம் சமைக்க லேட் பண்ற, எப்ப டிபன் ரெடியாகறது நான் வேலைக்கு போக வேணாமா” என கத்தினான்
”ஆச்சி 5 நிமிடம்” என்றாள்
”கீர்த்தனா இன்னும் என்ன செய்ற சீக்கிரம் ரெடியாகி வா” என கத்த
”நான் ரெடி ப்ளான் எடுத்து வைக்கறேன் இதோ வரேன்” என சொல்லிவிட்டு அவளும் கையில் ப்ளானுடன் வந்தாள்