(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

எடுத்துக்க பூட்டி நீயே வைச்சிக்க, வீட்ல பாட்டியிருப்பாங்க அவங்களோட இரு” வா வா” என அவளை அழைத்துக் கொண்டு அனைவருமாக கோயிலை சுற்றிவிட்டு நேராக தேவாவின் தாத்தா வீட்டிற்கு வந்தவன், அங்கு கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்து அவளை பாட்டியிடம் விட்டான்

   

”பாட்டி இவளை பார்த்துக்க, நான் நைட் வந்து கூப்பிட்டுக்கறேன் அவள் டிபன் மட்டும்தான் சாப்பிட்டா வேற எதுவும் சாப்பிடலை”

   

“இதுக்கு நீ இங்கயே தங்கியிருக்கலாமேடா அதான் எல்லாரும் ஒண்ணாயிட்டோமே”

   

“அதுவும் சரிதான் ஆனா வேணாம், வீட்ல 2  கல்யாணமாகாத பொண்ணுங்க இருக்காங்க அவங்க முன்னாடி நான் 2 பொண்டாட்டிங்களோட இருக்கறது எனக்கு கஷ்டமா இருக்கு” என சொல்ல கைலாசம் வந்தார்

   

”கல்யாணம் ஆனதும் எவ்ளோ பொறுப்பா பேசற பரவாயில்லைடா”

   

“முதல்ல தம்பிகளுக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பா”

   

“முதல்ல பொண்ணுங்க படிக்கட்டும், அப்புறமா கல்யாணம் பண்ணி வைச்சிடறேன் சரி எவ்ளோ கல்லு எவ்ளோ ஜல்லி வேணும்னு கேட்டேனே என்னாச்சி” என கேட்க

   

”என்னை ஏன் கேட்கறீங்க நான் வெறும் சூப்பர்வைசர்தான் உங்க மருமகளை கேளுங்க” என சொல்ல சரண்யாவிடம் வந்தார்

   

”மாமா 1 வாரம்  டைம் கொடுங்க ரெடி பண்ணி கொடுத்துடறேன்” என சொல்ல

   

”நிறைய டைம் எடுத்துக்க இப்பதானே அஸ்திவாரம் போட ஆரம்பிச்சிருக்கோம் கவலையில்லை நீ 1 வாரத்துக்குள்ள கொடுத்துடு போதும்”

   

“சரிங்க மாமா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.