(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

உன்கூட வாழ்ந்துட்டா தெரியுமா, 

   

ஏதோ கல்யாணம் ஆச்சி வேற வழியில்லைன்னு உன்கூட வாழ்ந்து குழந்தை பெத்தாலும் ஒரு நாளாவது அவள் சந்தோஷமா இருந்திருப்பாளா இல்லை, நீ செஞ்சது சரிதான் உன் காதலுக்காக நீ எல்லாம் பண்ணிக்கிட்ட சரி ஆனா பாதிக்கப்பட்டவங்க கிட்ட ஒரு முறையாவது நீ மன்னிப்பு கேட்டிருப்பியா 

   

அதை விட்டுட்டு என் தாத்தாவோட பகைமை பாராட்டி எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டு இதே வீட்ல தாமரையை தங்க வைச்சி ரெண்டு பேரையும் அடிக்கடி பார்க்க வைச்ச நீ சரியான சைக்கோ 

   

உன்னோட காதல் உண்மையான காதலே கிடையாது. என் தாத்தா நல்லாயிருக்க கூடாது, அவருக்கு எதுவும் கிடைக்கக் கூடாதுன்னு நினைச்சி நீ எல்லாம் செஞ்சிக்கிட்ட, கல்யாணம் ஆன பின்னாடியாவது ஒழுங்கா வாழ்ந்தியா தாத்தாவை பழிவாங்கறேன்னு தாமரையை வைச்சி அவரை வெறுப்பேத்தி தாமரையை கஷ்டப்படுத்தி நீயெல்லாம் ஒரு மனசன் சே போ போய் இன்னும் என்னவெல்லாம்  செய்யலாம்னு யோசி. 

   

நீ செஞ்ச அதே வேலையை என் வாழ்க்கையிலயும் திரும்ப செஞ்ச பார்த்தியா அங்க நிக்கற நீ, விக்ரம் பவி சரண்யாவை வைச்சி என்னை ரோடுக்கு இழுத்து சந்தோஷப்பட்ட இப்ப என்னடான்னா தாமரை தாமரைன்னு உருகற, இப்படி நாடகம் போட்டு யாரை ஏமாத்த பார்க்கற, நான் செஞ்சது தப்பு தாமரையை இங்க கொண்டாந்து விட்டது தப்பு 

   

அவள் எவ்ளோ கஷ்டப்பட்டிருந்தா இந்த வயசுல உன்னை விட்டு ஓடிவர துணிஞ்சிருப்பா, அந்தளவுக்கு நீ மனசலவில அவளை கொடுமைப்படுத்தியிருக்க உன்னை இன்னிக்கு கொல்லாம விடமாட்டேன்” என ஆத்திரத்துடன் கத்திக் கொண்டு அவர் மீது பாய வர சுந்தரத்தின் 3 மகன்களும் அவரை பிடித்துக் கொள்ள அந்நேரம் வைத்தியநாதன் வேகமாக வீட்டுக்குள் வந்தார்.

   

”தாமரை தாமரை” என அவர் அலறிக் கொண்டு பதட்டமாக ஓடிவர தேவா அமைதியானான். ஓடிவந்தவர் யாரையும் கவனிக்கவில்லை. நேராக தாமரையிடம் சென்று அமர்ந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.