(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”அய்யோ தாமரை என்ன நீ இப்படி இருக்க எழு எழுந்துக்க வா வா” என அவளது கையைபிடிக்க அதோடு தாமரை வைத்தியின் மடியில் சாயவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

   

”தாமரை தாமரை” என வைத்தி அவரது கன்னத்தில் தொட்டு தொட்டு எழுப்பி விட அவர் எழாமல் போகவே அதிர்ந்து தாமரை என ஓவென கத்தவும் சுந்தரம் சுக்கு நூறாக உடைந்து தரையில் அமர்ந்து விட்டார். 

   

தாமரையின் டாக்டர் மகன்கள் தாமரையை எழுப்பி ஹாலிலேயே படுக்க வைத்து வைத்தியம் பார்க்கலானார்கள். வைத்தியோ ஒரு மூலையில் அமர்ந்துக் கொண்டு அழுது ஒப்பாரி வைக்க தாஸ் உடனே தேவாவின் பாட்டியிடம் விசயத்தைக் கூறவும் அவர்கள் அனைவரும் இந்த வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

   

தாமரையின் மகன்கள் மருமகள்கள் அனைவரும் வைத்தியம் பார்த்தும் தாமரை எழவில்லை.

   

கீதா மட்டும் தன் மாமனாரிடம்

   

”மாமா அத்தை நம்மளை விட்டு போயிட்டாங்க” என சொல்லி அழவும் தேவாவால் அதை நம்பவே முடியவில்லை. அவன் மனதில் ஓடியது இதுவே

   

”அடிப்பாவி தாமரை என் தாத்தா மடியிலதான் நீ சாகனும்னு இருந்தியா, இதுக்குத்தான் இத்தனை நாள் உயிரை காப்பாத்தி வைச்சியா இது தெரியாம நான் அப்படி பேசிட்டேனே, நான் அமைதியா இருந்திருந்தா இன்னும் நீ இருந்திருப்பியா நான்தான் தப்பு என் மேலதான் தப்பு” என சத்தமாக சொல்லிவிட்டு தன் தாத்தாவிடம் சென்று அமர்ந்தான்

   

”தாத்தா நான்தான் தப்பு பண்ணிட்டேன் என்னாலதான் தாமரை செத்தா என்னை கொல்லுங்க தாத்தா எனக்கு தண்டனை தாங்க” என சொல்லி அழவும் அவரோ அமைதியாகவே மாறிவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.