(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

ஏதாவதுன்னா அப்பா இருப்பாரு. இல்லை தாத்தா வருவாரு. என்னை தனியாவே விடமாட்டாங்க. 

   

அப்ப எனக்கு ஒரு ஆசை தனியா நான் மட்டும் ஒரு பில்டிங் கட்டி பேர் எடுக்கனும்னு ஆசைப்பட்டேன். அந்த ஆசையை என் அப்பா தாத்தாகிட்ட சொல்லி அவங்க கிட்ட நான் கெஞ்சிக் கேட்டேன். முதல்ல முடியாதுன்னு சொன்னாங்க, நான்தான் பிடிவாதக்காரியாச்சே விடலை என் தொந்தரவு தாங்க முடியாம அவங்களும் சரின்னு சொன்னாங்க, 

   

அந்த சமயம் இந்த ஹாஸ்டல் கட்டற வேலை வரவும் என்கிட்ட பொறுப்பு கொடுத்தாங்க முதல்ல நான் தைரியமாதான் வந்தேன் கட்டிடலாம், பெரிய பிரச்சனை இல்லைன்னு நினைச்சேன் ஆனா இங்க நடந்த சில விசயங்களால என்னோட தைரியம் குறைஞ்சிட்டே வருது”

   

“என்ன நடந்திச்சி இங்க”

   

“அதான் நமக்குள்ள நடந்த விசயங்கள்தான், என்னால ரெண்டு பக்க குடும்பத்துக்கும் பெரிய இழப்பு, மானம் போச்சி, அதை சரிசெய்ய நினைச்சிதான் இந்த கல்யாணம் அதுவும் நீங்க வேணும்னு ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேன். அப்படியே ஹாஸ்டல் கட்டிட்டா என் அப்பாவுக்கு என் மேல ஒரு நல்ல அபிப்ராயம் வரும், ரெண்டு குடும்பமும் ஒண்ணாயிடும்னு ஆசைப்பட்டேன் ஆனா இன்னிக்கு ஒரே நாள்லயே நான் சோர்ந்து போயிட்டேன் அது என்னன்னுதான் எனக்குப் புரியலை” என அவள் சொல்ல அவனோ

   

”அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை அது உன் பிரமை, நாங்க கூட இருக்கோம்ல உன்னால கட்ட முடியும் கவலைப்படாத பயமில்லாம தூங்கு”

   

“தனியா தூங்க கஷ்டமாயிருக்கு”

   

“இதுவரைக்கும் நீ தனியாதானே வளர்ந்த“

   

“ஆமாம் அப்ப எனக்கு யாருமில்லைங்கற எண்ணத்தில ஒரு குருட்டு தைரியம் வந்துச்சி இருந்தேன், இப்ப நீங்க இருக்கவும் உங்க கூடவே இருக்கனும்னு தோணுது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.