(Reading time: 20 - 39 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”வெயில்ல நின்னு வேலை செய்தது ஒரு மாதிரியா டயர்டா இருக்கு” என்றாள்

   

”தினமும் நின்னா பழகிடும் இதான் வேலை இப்படித்தான் புரியுதா” என தேவா சொல்ல அதற்கு சரண்யா சரியென தலையாட்டவே கீர்த்தனாவைப் பார்த்தான் நைட் டிபன் ரெடியா”

   

“ரெடி”

   

“பரிமாறு”

   

“இப்பவேவா”

   

“ம் டயர்டா இருக்கு பரிமாறு சாப்பிட்டு தூங்கலாம்” என சொல்ல அவளும் அனைவருக்கும் பரிமாற சாப்பிட்டு விட்டு தாஸ் உறங்குவதற்கு வெளியே சென்றுவிட்டான். வாசல் கதவை சாத்திவிட்டு வந்த தேவாவோ சரண்யாவின் அறையை பார்த்தான். அவள் அழுதுக் கொண்டிருக்கவே அவளிடம் வந்தான். 

   

”என்ன அழற என்னாச்சி”

   

”அது தெரியலை”

   

“பயமா பதட்டமா”

   

“ரெண்டுமே என்னால எப்படி அந்த ஹாஸ்டலை கட்ட முடியும்னு நினைச்சா கவலையா இருக்கு”

   

“அப்புறம் ஏன் ஒத்துக்கிட்டு சென்னையிலிருந்து வந்த”

   

“சென்னையில எல்லாமே என் அப்பாதான் செய்வாரு. நான் தாத்தாகிட்டயே வளர்ந்ததால அப்படியே அவர் புத்தி எனக்கு வந்துச்சின்னு அப்பா சொல்வாரு. பிடிவாதம் அதிகம் எனக்கு, அப்பா கட்டற பில்டிங்கல நானும் அவர் கூட சேர்ந்து வேலை செய்வேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.