பேசிக்கிட்டு இருக்க“
”அப்போ நீங்களும் வேலை செய்யாம வேடிக்கைதான் பார்த்துக்கிட்டு இருக்கீங்களா“
”அதிகமா பேசாத“
”உண்மையை சொன்னா உங்களுக்கு ஏன் சார் கோபம் வருது”
”உன் வேலை க்ளர்க்தானே“
”ஆமாம் சார் அதுலயும் சந்தேகமா“
”சரி க்ளர்க்கா உன் வேலை என்ன“
”இப்படி மொட்டையா கேட்டா என்ன பதில் சொல்றது“
”ஆயிரத்தெட்டு வேலையிருக்குன்னு சொன்னியே, அதெல்லாம் என்ன ஏதுன்னு கேட்டேன்” என சொல்லவும் அவள் சட்டென தன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு
”சார் இப்ப மணி ஒன்னு லன்ச் டைம் நான் சாப்பிட்டு வந்து பேசட்டுமா“
”சாப்பாடு ஒண்ணுதான் குறைச்சலா இப்ப”
”எனக்கு பசிக்குது சார்”
”எனக்கும்தான் பசிக்குது, காலையிலயே எதுவும் சாப்பிடலை அக்கா வேற என்னை திட்டிட்டாங்க, கோச்சிக்கிட்டு வந்துட்டேன்”
”அச்சோ பாவம் வாங்க சார் கான்டீன்ல உட்கார்ந்து சாப்பிடலாம்“
”ப்ச் என்னை கான்டீன் வரச் சொல்றியா”