(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அம்மா ஸ்தானத்தில எனக்கு எல்லாம் செய்வாங்க. 

   

அதனால நான் அண்ணாவுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு ஆசைப்படறேன். எனக்கு பொருளா எதுவும் வேணாம் அண்ணிதான் வேணும் அவங்க வீட்ல சண்டைன்னு அண்ணா ஒரு நாள் சொல்லி வருத்தப்பட்டாரு. அத்தான் எப்படியாவது அண்ணியை அண்ணாவோட சேர்த்துடுங்க ப்ளீஸ் அத்தான்” என அவள் உருகி உருகி சொல்லவும் அதில் ரிஷி கரைந்தே போனான்

   

”சரிம்மா உனக்கென்ன அண்ணிதானே வேணும் கண்டிப்பா நான் கூட்டிட்டு வரேன் சரியா”

   

“ம்” என்றாள் சந்தோஷமாக அதோடு அவனுக்கு முத்தமும் தந்தாள்.

   

”எப்பவும் நான்தான் உனக்கு பூஸ்ட் தருவேன் இன்னிக்கு நீ தர்றியா”

   

“ஆமாம் பெரிய காரியம் சாதிக்க போறீங்கள்ல அதுக்குதான் இது”

   

“ஓ அப்ப அண்ணியை கூட்டிட்டு வந்து அர்ஜூனோட பேசி முடிச்சிட்டா இதே மாதிரி நிறைய தருவியா”

   

“கண்டிப்பா தருவேன்”

   

“சரி நான் இப்பவே போய் அர்ஜூன் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்து உன்னை பார்க்கறேன்” என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட அண்ணாவுக்கு கல்யாணம் என்ற சந்தோஷத்தில் அவள் இன்று சந்தோஷமாகவே சமையல் செய்யத் தொடங்கினாள்.

   

ஹாலில் இருந்த தாத்தாவிடம் வந்த ரிஷி அவர் பக்கத்தில் அமைதியாக அமர்ந்தான்

   

”வாடா உனக்காகதான் நான் காத்திருந்தேன் எங்க போன”

   

“என் ஆளை பார்க்க” என்றான் சர்வ சாதாரணமாக

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.