(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அப்பாவைதானே”

   

“இல்லை நந்தினியை”

   

“தாத்தா”

   

“தாத்தாவேதான்  அந்த பயம் இருக்கட்டும் சொன்னதை செய் எழு சாப்பிடலாம்” என அவனை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிள் சென்றார் தாத்தா.

   

டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்க வழக்கம் போல் நந்தினி அனைவருக்கும் டிபன் பரிமாறினாள். சமையல் செய்து செய்து சுசித்ராவுடன் பழகிய காரணத்தால் இந்த வீட்டு சமையல் பக்குவம் அவளுக்கு சீக்கிரமே வந்துவிட்டது. அதை நினைத்து தாத்தா உள்ளம் மகிழ்ந்தார். 

   

சுசித்ராவிற்கும் வந்தனாவை விட நந்தினியை பிடித்திருந்த காரணத்தால் இந்த வீட்டு மருமகளாக அவளை மாற்றிக்கொண்டிருந்தார். ரிஷிக்கோ இல்லை மற்ற இருவரில் யாருக்கு நந்தனி கிடைத்தாலும் சரி எனக்கு சந்தோஷம் என சுசித்ரா தன் நினைவில் நந்தினிக்கு பல உதவிகளை செய்தார்.

   

அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம் தாத்தா சுசித்ராவைப்பார்த்து சைகை செய்ய அவர் உடனே

   

”மாமா” என அழைக்க ஒண்ணும் தெரியாதது போல 

   

”என்னம்மா” என்றார் தாத்தா

   

”என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாமா படுத்த படுக்கையா இருக்காங்க அவங்க சொல்றாங்க கண்ணு மூடறதுக்குள்ள கருணாவுக்கும் தினாவுக்கும் கல்யாணத்தை பார்த்துடனும்னு ஆசைப்படறாங்க இப்ப என்ன செய்றது மாமா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.