(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அதுக்கென்னம்மா எப்படியும் ரிஷிக்கு கல்யாணம் செஞ்சி வைக்கப்போறேன் அப்படியே அவனுங்களுக்கும் செஞ்சிடறேன்”

   

“ஆனா பொண்ணுங்க வேணுமே மாமா” என கேட்க வந்தனாவிற்கு திடீரென பரப்பரப்பு ஒட்டிக்கொண்டு அவள் ஆசையாக சுசித்ராவையே பார்க்க தாத்தா அதை கவனித்துவிட்டு தன் மனதுக்குள் கோபப்பட்டவர் ரிஷியை பார்த்து சைகை செய்ய அவன் உடனே

   

”சித்தி நீங்க கவலைப்படாதீங்க நான் புரோக்கர் கிட்ட சொல்லிடறேன். இந்த மாசத்துக்குள்ள பொண்ணுங்க கிடைச்சிடுவாங்க. இந்த முறை போட்டியெல்லாம் வேணாம் நேரா கல்யாணம் தான். அடுத்த மாசம் கல்யாணம் வைச்சிக்கலாம். ஆனா அதுக்கு நாள் குறிக்கனுமே யார் என்கூட வருவா” என அவன் யோசிக்க பாட்டி மெதுவாக 

   

”ரிஷி”

   

“பாட்டி”

   

”நான் வேணா உன்கூட வரட்டுமாடா”

   

“ஆனா பாட்டி நீங்களே பெரிய ஆளு இந்த மாதிரி சின்ன சின்ன வேலையெல்லாம் செய்ய உங்களுக்கு ஏது நேரம்” என கேட்க பாட்டியின் முகம் வாடிவிட்டது. அதைக்கவனித்த தாத்தா ரிஷியை முறைக்க

   

”சரி பாட்டி வாங்க உங்க அனுபவம் எனக்கேது. என் அம்மாவையே நீங்கதான் செலக்ட் பண்ணிங்க பிரச்சனையில்லை பாட்டி நீங்களும் நானும் இப்ப நேரா ஜோசியர் கிட்ட போய் அடுத்த மாசம் நல்ல மூகூர்த்த நாளா 5 நாட்கள் பார்த்துட்டு வரலாம். அர்ஜூனுக்கும் வெண்ணிலா கிடைச்சிட்டா அவளுக்கும் சேர்த்து கல்யாணம் பண்ணிடலாம். அவன் மட்டும் ஏன் நிம்மதியா ஜாலியா இருக்கனும்.” என சொல்ல பாட்டியின் முகத்தில் சிரிப்பு வந்து அவர் சரியென தலையாட்டினார்.

   

அதைப்பார்த்த தாத்தா திருப்தியடைந்து தன் இரு மகன்களிடமும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.