முடியாது தாத்தா” என சொல்லிவிட்டாள். அவளின் பேச்சைக்கேட்டு தாத்தாவும் அந்த பில்களை சரிபார்த்தார்.
அதை பவித்ராவிடமும் சுசித்ராவிடமும் காட்டினார். அவர்களும் அதை சரி பார்த்து தாத்தாவிடம்
”ஆமாம் மாமா இந்த பில்கள் எல்லாம் நான் ஏற்கனவே போன மாசம் பார்த்திருக்கேன். எப்படி இப்படி அடித்தல் திருத்தலோட இருக்கு இதுல இருக்கற தொகையும் தப்பு மாமா” என பவித்ரா சொல்ல அதற்கு சுசித்ராவும் ஆமாம் என தலையாட்டினாள். வந்தனாவின் நிலையோ முற்றிலும் மோசமாகி போன நிலையில் அவள் அமைதியாக நின்றுக்கொண்டிருக்க தாத்தா வந்தனாவிடம்
”வந்தனா இங்க வா” என அழைக்க அவள் முன்னாடி வந்து நின்றாள்
”என்னம்மா இது பில்கள் தப்பாயிருக்கு அப்படியிருக்கறப்ப உன்னால எப்படி இந்த தவறுகளை கண்டுபிடிக்க முடியலை உடனே கணக்கு போட்டு கொடுத்துட்ட உனக்கு கணக்கு வழக்கு பார்க்க வராதா”
“அது தாத்தா நீங்கதானே இந்த பைலை கொடுத்தீங்க”
”அதுக்கு”
“தப்பான பில்களை நீங்க தரமாட்டீங்கன்னு உங்க மேல நம்பிக்கையில நான் கண்ணை மூடி கணக்கு போட்டுட்டேன் தாத்தா”
“நான்னு இல்லை வேற யார் பில் கொடுத்தாலும் அது சரியா தப்பான்னு யோசிக்க வேணாமா நீயா உன் இஷ்டத்துக்கு கணக்கு போட்டா எப்படி இதனால வீட்டு நிர்வாகம் பாதிக்கும். இப்படியா ஒரு பொண்ணு கணக்கு வழக்கு பார்க்குமா”
“நான் சரியாதான் செய்தேன் தாத்தா நீங்கதான் தப்பு பண்ணிட்டீங்க. தப்பான பைலை கொடுத்து கணக்கு போட சொன்னீங்க உங்க மேல இருந்த நம்பிக்கையால நான் சரிபார்க்காம