(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

கணக்கு போட்டுட்டேன். இதுல என் தப்பு எதுவும் இல்லை தாத்தா உங்க மேலதான் தப்பு” என சொல்ல பவித்ராவுக்கு கோபம் வந்தது

   

”வந்தனா என்ன பேசற நீ இது போட்டின்னு மாமா அப்பவே சொன்னாரு. அப்படியிருக்கறப்ப போட்டிக்காக இந்த மாதிரி கூட செய்திருக்கலாம். நீ இதையெல்லாம் சரியா இருக்கான்னு பார்க்காம இப்படி மாமா மேலயே பழி போடலாமா. இங்க பாரு நந்தினி கூடதான் கணக்கு போட ஆரம்பிச்சா ஆனா சரியா இருக்கா இல்லையான்னு பாரத்து தானே கணக்கு போட்டா அவளால முடிஞ்சது உன்னால முடியலையா” என கேட்க

   

”என்னை ஏன் திட்டறீங்க அத்தை. நான் கரெக்டாதான் செஞ்சேன் இதுல தப்பு என்னோடது இல்லை தாத்தாவோடதுதான் தப்பு. நான் அவர் மேல நம்பிக்கை வைச்சேன் ஆனா அவரு இப்படி தப்பு செய்வார்ன்னு எனக்கு தெரியாது. இப்படி அவர் மோசம் செய்வாருன்னு தெரிஞ்சிருந்தா நான் சரியா கணக்கு பார்த்திருப்பேன்” என சொல்ல பவித்ராவால் தாங்க முடியவில்லை. சுசித்ராவும் ஏதோ பேச எழ தாத்தா கைகாட்டி அடக்கினார்.

   

பவித்ரா தான் அழைத்து வந்த வந்தனாவிடம்

   

”நானும் உன்னை நல்ல பொண்ணுன்னு தேர்ந்தெடுத்தேன். அதுக்காகவே இந்த வீட்டுக்கும் கூட்டிட்டு வந்தேன் வந்த முதல் நாள்ல இருந்து ஒழுங்காயிருந்த நீ போக போக மாறிட்ட. அதுலயும் இந்த 5 நாளா உன் நடவடிக்கையே சரியில்லை. இங்க நீ எதுக்கு வந்த ரிஷிக்காகதானே போட்டியில கலந்துக்க வந்த அப்ப போட்டி எப்படியிருக்கும் உனக்காக சுலபமாவா இருக்கும் இப்படிதான் கஷ்டமாயிருக்கும் நீதான் அதை சரியா பார்த்து செஞ்சி முடிக்கனும் அதைவிட்டுட்டு மாமா மேலயே பழி போடுவியா உன் தப்பை அவர் மேல தினிப்பியா தப்பு வந்தனா இது ரொம்ப தப்பு”

   

“என்னை என்ன செய்யச்சொல்றீங்க அத்தை இப்பவும் நான் கரெக்டாதான் செய்தேன். ஆனா நீங்கதான் தாத்தா செய்ற தில்லு முல்லை புரிஞ்சிக்காம என்னை திட்டறீங்க”“

   

”திட்டாம என்ன செய்வாங்க நீ தப்பு தப்பா கணக்கு வழக்கு பார்த்தா குடும்பம் என்னாகிறது”

   

“இது ஒண்ணும் என் குடும்பம் இல்லையே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.