(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அதான் என் பயமே அண்ணா கல்யாணம் வரைக்கும் என் தங்கச்சி கற்போடு இருக்கட்டும் எதுவாயிருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம்தான் முதல்ல என்னையும் வெண்ணிலாவையும் சேர்க்கற வழியை பாருங்க”

   

“அதுக்கு நான் என்னடா செய்ய முடியும்”

   

“ஏதாவது செய்ங்கண்ணா”

   

“ஏதாவது செய்றதா என்னடா செய்ய முடியும் அந்தாளு ஒரு மோசமானவன்”

   

“அண்ணா நீங்க அந்தாளு கிட்ட பேசி முடிச்சி எப்ப வெண்ணிலாவோட வர்றீங்களோ அப்பதான் நந்தினி உங்களுக்கு இந்த முறை நான் அவளை வேற இடத்தில தங்க வைக்கிறேன் அதை உங்களால கண்டு பிடிக்க முடியாது” என சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்

   

”அம்மாடி அண்ணன் பேச்சை கேளும்மா வாம்மா என்கூட” என பாசமாக அழைக்க

   

“அண்ணா”

   

“வாம்மா அண்ணா சொன்னா கேட்கனும் கண்ணுல்ல வா வா” என சொல்ல அவளும் சரி என தலையாட்டிவிட்டு சென்றாள். அதைப்பார்த்த ரிஷிக்கு முகத்தில் ஈயாடவில்லை

   

”அடிப்பாவி என்னைப் பார்த்தா பாவமாவே தெரியலையே கல்யாணத்தன்னிக்கு கூட உங்க அண்ணன் கூப்பிட்டா எழுந்து ஓடிடுவியோ ம்ஹூம் இது சரியில்லை இவளை இத்தனை நாள் விட்டது தப்பா போச்சி கல்யாணம் மட்டும் ஆகட்டும் இவளை கூட்டிட்டு பாரினுக்கு போயிடனும் இங்க இருந்தா அர்ஜூனே வந்து நிப்பான். கடைசியில பாசமலர் படத்தை பார்த்த மாதிரியிருக்கும்” என தனக்குள் நினைத்துக்கொண்டே மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.

   

நாட்கள் வேகமாக சென்றது மடமடவென்று காரியங்கள் நடந்துக்கொண்டிருந்தது. நந்தினியை அர்ஜூன் இந்த முறை ரிஷியால் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் தங்க வைத்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.