நந்தினியை பார்க்க எண்ணிய ஆசையால் ரிஷியும் தன் தம்பிகளுக்கு பொண்ணு தேடுதல் முதல் கல்யாண வேலைகள் வரை அனைத்தும் வேகமாக செய்ய ஆரம்பித்தான். இதற்காகவே அவன் கஷ்டப்பட்டதின் பலன் ஒரு மாதம் கழித்து....
மண்டபத்தில் களை கட்டியது. ஒரே சமயத்தில் 3 கல்யாணம் என்பதால் ஏற்பாடுகள் எல்லாம் தடல் புடலாகவே இருந்தது. முகூர்த்த நேரம் வந்ததும் ஐயர் மந்திரம் சொல்ல கெட்டி மேள சத்தத்தில் ரிஷி நந்தினியின் கழுத்தில் தாலிகட்டினான்.
அதே போல் அவனது தம்பிகளான கருணாவும் சரி தினாவும் சரி அவர்களுக்கு பார்த்த மணப்பெண்களின் கழுத்தில் அவர்களும் தாலிகட்டினார்கள். திருமணம் நன்றாகவே முடிந்தது. கல்யாணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு உணவருந்த சென்றுவிட்டனர்.
ரிஷி அன்றே ஹனிமூனுக்காக லண்டனுக்கு டிக்கெட் போட்டிருந்தான். அதனால் அவன் மண்டபத்திற்கு வரும் போதே லக்கேஜ்களுடன் வந்துவிட்டான். தாலி கட்டி முடித்த கையோடு சில சடங்கு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டவன் சாப்பிட்டுவிட்டு நந்தினியையும் தன் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு ஏர்போர்ட் சென்றான். அங்கு அவனுக்கு முன்பே அர்ஜூன் வெண்ணிலாவுடன் காத்திருந்தான்.
அர்ஜூனை பார்த்த நந்தினி அவனிடம் சென்றுவிட தலையில் அடித்துக்கொண்டான் ரிஷி.
”இங்க என்னடா செய்ற”
என ரிஷி பொங்க அவனோ நந்தினியிடம்
”அம்மாடி பார்த்து பத்திரமா போய்ட்டு வாம்மா” என கண்கலங்க நந்தினியும் கண்கலங்கி
”சரிங்கண்ணா நீங்க பத்திரமா இருங்க”
”எனக்கென்னம்மா உன் அண்ணி இருக்கா அவள் என்னைப் பார்த்துக்கறா நீதான் லண்டன்ல தனியா இருக்கனும்”