உன்னோட 2 மருமகள்கள் எங்க”
“அதோ அங்க இருக்காங்க பாருங்க ரிஷியை போலவே நாங்களும் ஹனிமூன் போகனும்னு ஒரே பிடிவாதம், ஒருத்தன் பாரிஸ்க்கு டிக்கெட் போட்டுட்டான் இன்னொருத்தன் சுவிஸ்க்கு டிக்கெட் போட்டுட்டான். செக்கிங்காக போயிருக்காங்க”
“பரவாயில்லை உன்னோட மருமகள்களும் பெரிய பணக்கார பொண்ணுங்களா இருந்தாலும் அடக்கமாதான் இருக்காங்க”
“பின்ன தேடினது யாரு நம்ம மாமியாராச்சே நம்மளை மாதிரியே தேடிப்பிடிச்சிருக்காங்க”
“பரவாயில்லை விடு நம்மளை மாதிரி இருந்தாதான் நம்ம பேச்சை கேட்பாங்க”
“சரியா சொன்னீங்க அக்கா” என சுசித்ரா சொல்லி சிரிக்கவும் முன்னாடி வரிசையில் அமர்ந்திருந்த ரிஷி நந்தினியையும் அர்ஜூனையும் கண்டு கோபத்தில் கருவிக்கொண்டிருந்தான். அவனது பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தா.
”காசிக்கு போனாலும் கருமம் விடாதுன்னு சொல்வாங்க அது உண்மைதான் போல இருக்கு” என சொல்ல ரிஷி திரும்பி தாத்தாவை முறைத்தான்
”என்னை ஏன்டா முறைக்கற அங்க பாரு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு பிளைட் கிளம்ப. இங்க வந்து 2 மணி நேரத்துக்கு மேல ஆகுது அப்படி என்னதான் அர்ஜூனும் நந்தினியும் பேசிக்குவாங்களோடா யப்பா தாங்க முடியலை”
“என்னாலயும்தான் முடியலை”
“டேய் போதும்டா ஏர்போர்ட்ல சுனாமி வந்துடப்போகுது முதல்ல அவங்க பேச்சை நிப்பாட்டலாம் வாடா” என ரிஷியை அழைத்துக்கொண்டு அர்ஜூன் நந்தினியிடம் செல்ல அவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
”ரிஷி அண்ணா கொஞ்சம் அப்படி இப்படிதான் அதுக்காக நீ பயப்படகூடாது. அட்ஜஸ்ட்