(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”அப்படி பார்த்தா உன்னால தான் எனக்கும் வெண்ணிலா கிடைச்சா அவளோட கல்யாணம் ஆகி இப்ப நானும் ஊரு உலகம் முன்னாடி குடும்பஸ்தனா இருக்கேன் அதுக்கு காரணம் நீதானே இல்லைன்னா நான் வெறும் உதவாதவனாகவே அலைஞ்சிக்கிட்டு இருப்பேனே”

   

”அப்படியெல்லாம் சொல்லாதீங்கண்ணா” என நந்தினி சொல்ல அதற்கு அர்ஜூன் பேச என இருவருமே சுமார் 2 மணி நேரமாக பாசமலர் படத்தையே ஓட்டி முடித்தனர்.

   

அங்கு போடப்பட்டிருந்த சேர்களில் ரிஷியின் குடும்பம் அமர்ந்து இந்த கண்கொள்ளாக்காட்சியை கண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டது.

   

”அர்ஜூன் ரொம்பவே மாறிட்டான் வெண்ணிலாவோட அப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னதும் வெண்ணிலாவை அவசரமா அழைச்சிக்கிட்டு போய் ரிஜஸ்டர் மேரேஜ் பண்ணி வெண்ணிலாவை நம்ம வீட்டுக்கே மருமகளா கூட்டிட்டு வந்துட்டான்  வெண்ணிலாவும் நல்ல பொண்ணுதான் அர்ஜூன் தான் வேணும்னு கடைசி வரைக்கும் பேசினா பாவம் அர்ஜூன் அவளுக்காக போலீஸ் கேஸ்ன்னு அலைஞ்சி திரிஞ்சி கஷ்டப்பட்டான்”

   

“கஷ்டப்பட்டாலும் அவனுக்கு நல்ல பொண்ணு கிடைச்சிட்டா. பாவம் அந்த மாணிக்கவேல்தான் தன் மொத்த சொத்தையும் பொண்ணு பேர்ல எழுதி வைசிட்டான். அது கூட வெண்ணிலாவுக்கு தெரியலை. கடைசி நேரத்தில அர்ஜூன்தான் வேணும்னு மொத்த சொத்தையும் திருப்பி அவள் அப்பா பேருக்கே எழுதிக்கொடுத்துட்டுல்ல வந்துட்டா”

   

“ஆமாம்ங்க அப்படியாப்பட்ட ஒரு ஆளுக்கு இப்படி ஒரு தங்கமான பொண்ணு நம்ம அர்ஜூன் கொடுத்து வைச்சவன்” என பவித்ரா சொல்ல அதற்கு சுசித்ரா

   

“நம்ம ரிஷிகூட கொடுத்து வைச்சவன்தான்க்கா அங்க பாருங்க நந்தினி போல ஒரு மருமகள் கிடைக்க நீங்க கொடுத்து வைச்சிருக்கனும்க்கா”

   

”நீ சொன்னதும் சரிதான். போட்டி வைச்சில்ல என் மருமகளை நான் தேடிக்கிட்டேன். ஆமா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.