“டேய் நான் பார்த்துக்கிறேன்டா 6 மாசம்தானே சீக்கிரமா ஓடிபோயிடும்”
“எனக்கு 6 மாசம்ங்கறது ஏதோ 6 ஜென்மம் போல இருக்குண்ணா என் தங்கச்சிக்காகதான் நீங்க லண்டன் போறதுக்கு நான் சம்மதிச்சேன். அவளை பத்திரமா கூட்டிட்டு வந்துடுங்கண்ணா என்னால அவளை பார்க்காம இருக்க முடியலைண்ணா தினமும் வீடியோ காலிங்ல வாங்கண்ணா நீங்க வரலைன்னாலும் பரவாயில்லை தங்கச்சியையாவது வரவைங்கண்ணா”
“சரிடா செய்றேன் போதுமா”
“6 மாசம் அவள் உங்க கூட இருக்கனும் சின்ன பொண்ணுன்னா பக்குவமா நடந்துக்குங்கண்ணா நாங்க வேற கூட இல்லை எதையாவது பண்ணிட போறீங்கண்ணா” என அர்ஜூன் பேச தாத்தாவிற்கு தலைவலியே வந்தது
”டேய் அர்ஜூன் போதும் நிறுத்துடா அவ்ளோ அக்கறையிருந்தா நீயும் இவங்களோட லண்டன் போய் சேரு உயிரை வாங்காத” என சொல்ல அர்ஜூன் சட்டென சிலை போல நின்றான். அவனது இந்த திடீர் செயலைக்கண்டு பயந்த நந்தினி
”அண்ணா” என அழைக்க உடனே சுயநிலைக்கு வந்தவன்
”தாத்தா நான் கூட இதை மறந்துட்டேன். இப்பவே நானும் லண்டனுக்கு டிக்கெட் எடுக்கறேன் தாத்தா” என சொல்ல ரிஷி அவனை கெட்டியாக பிடித்தான்
”டேய் வேணாம்டா நான் வாழனும்னு போறேன் நீ வந்துடாத உன் கால்ல விழறேன் ப்ளீஸ்டா”
“நான் எதையும் செய்ய மாட்டேன் அண்ணா”
“என்னை எதுவும் செய்யவிட மாட்டியே அதனாலதான் சொல்றேன் நீ இங்கயே இரு நாங்க போறோம்” என அவன் சொல்லும் போதே மைக்கில் அறிவிப்பு வர ரிஷி உடனே நந்தினியின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.