“எனக்கு என்ன அண்ணா அதான் அத்தான் இருக்காரே அவர் என்னைப் பத்திரமா பார்த்துக்குவாரு”
“என்னதான் ரிஷி அண்ணா இருந்தாலும் சரி நீ ஜாக்கிரதையா இருக்கனும்”
“சரிங்கண்ணா”
”வேளா வேளைக்கு சாப்பிடனும்”
“சரிங்கண்ணா”
“நேரத்துக்கு தூங்கனும்”
“ம்”
”போனதும் போன் பண்ணனும்”
“ம்”
”நான் எப்பவும் உன்னையேதான் நினைச்சிட்டு இருப்பேன்”
“நானும்தான் எனக்காக அப்பா ஸ்தானத்தில முன்ன நின்னு என் கல்யாணத்தை பிரம்மாண்டமா செஞ்சி முடிச்சீங்களே ரொம்ப நன்றிண்ணா”
“என்னம்மா நீ இது என் கடமை இதுக்கு போய் நீ நன்றின்னு சொல்ற தப்பும்மா வேணாம்”
“இருக்கட்டும்ணா என் சொந்தங்களே என்னை வெறுத்தப்ப என்னை தங்கச்சியா நினைச்சி இன்னிக்கு எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுத்திருக்கீங்க எல்லாம் உங்களாலதானே அண்ணா” என நந்தினி அழவும்