(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

இந்த வீட்ல இருக்கறவங்களை நான் நல்லபடியா பார்த்துக்குவேன்” என சொல்லவும் பவித்ரா அவளது கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்தார்.

   

”போதும் நிறுத்து எங்க வந்து யாரை பத்தி பேசற முதல்ல என் மாமனாரை பத்தி தப்பா பேசின இப்ப என் அத்தை இருக்கறப்பவே அவங்க முன்னாடியே அவங்களை பத்தி தப்பா பேசறியா எவ்ளோ நெஞ்சழுத்தம் உனக்கு உன் தப்பை நீ ஒத்துக்காம எதிர்ல இருக்கறவங்க மேலயா பழி போடற போதும் நீ இனிமே இங்க இருக்க வேணாம் கிளம்பு போ வெளிய போ” என விரட்ட

   

“அத்தை நீங்களே என்னை கூட்டிட்டு வந்து என்னை அவமானப்படுத்திறீங்களா”

   

”நான் உன்னை கூட்டிட்டு வந்தது நீ அமைதியாயிருக்க அடக்கமாயிருக்க எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணுவேன்னுதான் நான் நினைச்சேன் இப்படி அடுத்தவங்க மேல பழியை போட்டு நீ தப்பிச்சிக்குவேன்னு எனக்கு தெரியாது. நீ மட்டும் மருமகளா வந்தா இங்க இருக்கறவங்களை எல்லாம் இப்படி பேசியே எல்லாரையம் பிரிச்சி தனித்தனியா அனுப்பிடுவ வேணாம்மா நீ கிளம்பு போ” என சொல்லவும் வந்தனாவும் வேறு வழியில்லாமல் தன் லக்கேஜ்களை பேக் செய்து அன்றே கிளம்பியும் விட்டாள். பவித்ராவும் வந்தனாவின் வீட்டுக்கு போன் செய்து அவள் செய்த தவறை சொல்லி அத்துடன் அந்த உறவுமுறையையும் முறித்துக்கொண்டார்.

   

ரிஷிக்கு இப்போது சந்தோஷமாகி போனது. நந்தினி ஜெயித்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் அவன் தாத்த்தாவிடம்

   

”தாத்தா நந்தினி ஜெயிச்சிட்டா”

   

“ஆமாம்டா” என சொல்லிவிட்டு அர்ஜூனை பார்த்தார் தாத்தா

   

”அர்ஜூன் நந்தினி ஜெயிச்சிட்டா நீ என்ன பண்ற நந்தினிக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் அவளை ஹாஸ்டல்ல தங்க வைச்சிடு உன்னை தவிர யாரும் அவளை பார்க்க கூடாதுன்னு சொல்லிடு. அதே போல நந்தினி நீயும் கல்யாணம் வரைக்கும் ரிஷிகூட பேசவே கூடாது அவனுக்கு நிறைய வேலைகள் இருக்கு உன்னோடு  சேர்த்து 4 கல்யாணம் செய்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.