இருந்தாலும் நீங்க கணக்கு பண்ணுங்க.
இந்த வீட்டு மருமகளுக்கு ஒழுங்கா கணக்கு வருதான்னு நான் பார்க்கனும் தனித்தனியா கணக்கு போட்டு எவ்ளோ ஆச்சின்னு சொல்லனும் கடைசியா மொத்தம் எவ்ளோ ஆச்சின்னு சொல்லனும் புரியுதா வந்தனா நீ முதல்ல ஆரம்பி. நந்தினி அவள் முடிக்கறதுக்குள்ள சீக்கிரமா மதிய சமையலை முடிச்சிடு சுசித்ராவை கூட்டிட்டு போ ரெண்டு பேரா முடிச்சிட்டு நேரத்தோடு வாங்க” என சொல்லவும் நந்தினி எழ சுசித்ராவும் அவளை அழைத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றார்.
வந்தனாவும் தன்னிடம் தந்த பைலை பார்த்தாள் ஒரு மாசத்துக்கான பில்கள் எல்லாம் அதில் இருந்தது. அது பார்ப்பதற்கு நாள் வாரியாக அடுக்காமல் இருந்தது. அதைப்பற்றி அவள் கவலைப்படாமல் கணக்கு போட ஆரம்பித்தாள். அவளுக்காக ஒரு நோட்டும் கொடுத்திருந்தார் தாத்தா. அவளும் அந்த பில்களில் உள்ள செலவுகளை வகைப்படுத்தினாள்.
மருத்துவ செலவு, காய்கறி செலவு, மளிகை செலவு மற்றும் பல்வேறு இதர செலவுகள் என அனைத்தையும் தனித்தனியாக நோட்டில் எழுதி பில்களை பார்த்து கால்குலேட்டர் மூலம் கணக்குகளை போட ஆரம்பித்தாள். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கணக்கு போட்டு முடித்தவள் அதை தாத்தாவிடம் தர அவர் அதை பார்க்காமல் அப்படியே வைத்துவிட்டார்.
”என்ன தாத்தா பார்க்கலையா”
“பார்க்கலாம்மா நந்தினியும் வரட்டும் அவளும் கணக்கு போடட்டும் ஒண்ணாவே சேர்த்து பார்த்துடலாம்” என சொல்ல அவளும் சரியென்றாள்.
நந்தினியும் சுசித்ராவும் 10 நிமிடம் கழித்து அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
தாத்தாவும் அதே பைல் வேறு ஒரு காலி நோட் புக்கை நந்தினியிடம் தந்தார். அதை வாங்கியவள் பொறுமையாக அந்த பைலை பார்த்தாள். எல்லாமே கலந்து கலந்து இருக்கவே முதலில் தேதிவாரியாக அதை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். மளிகை, காய்கறி என தனித்தனியாக வகைப்படுத்தினாள். அதிலும் தேதிகளை வைத்து மீண்டும் சரியாக